வழக்கு பின்னணி
Arvind Kejriwal acquitted From Delhi Liquor Scam : ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வரும் டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கை ஊழலை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தது.
அமலாக்கத் துறை வழக்கு _கைது
அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இதே ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ தனியாக வழக்கு பதிவு செய்து கெஜ்ரிவாலை கைது செய்தது.
அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தாலும் சிபிஐ வழக்கு காரணமாக தொடர்ந்து சிறையில் இருந்தார் கெஜ்ரிவால்.
குற்றவாளிகள் இல்லை என டெல்லி நீதிமன்றம் விடுவிப்பு
இந்த நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியாவும் குற்றவாளிகள் இல்லை என கூறி டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது .
விடுவிப்பிற்கு பிறகு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்
விடுதலைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால் நான் ஊழல்வாதி அல்ல. நானும் , மணீஷ் சிசோடியாவும் முற்றிலும் நேர்மையானவர்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
உண்மை வெற்றி பெறும் என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம். இந்திய சட்ட அமைப்பின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய கெஜ்ரிவால்
நமது அரசியலமைப்புச் சட்டத்தையும், அத்தகைய ஒரு அரசியலமைப்பை நமக்கு வழங்கிய பி.ஆர். அம்பேத்கரையும் நினைத்து நாங்கள் மீண்டும் பெருமைப்படுகிறோம் என்றும் மீண்டும் .உண்மை வென்றுள்ளது எனவும் தெரிவித்தார்.