

குஜராத்தின் அகமதாபாத் நகரில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
மருத்துவ கல்லூரி விடுதியில் விமானம் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இதை ஆய்வகத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் பதிவாகி உள்ள தகவலின் அடிப்படையில் விமான விபத்துக்கான காரணம் தெரிய வரும்.
விமானத்தின் வால் பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் கறுப்பு பெட்டியில், விமானிகள், ஊழியர்களின் உரையாடல்கள் அனைத்தும் பதிவாகும்.
விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை உள்ளிட்ட தகவல்களும் கறுப்பு பெட்டியில் பதிவாகிக் கொண்டே வரும்
பெரும் தீ விபத்து, கடலில் விமானம் மூழ்கினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் கறுப்பு பெட்டி பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
பதிவான தகவல்களை பெற 15 நாட்கள் ஆகும் என்பதால், அதன் பிறகே விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும்.
====