"டெல்லியில் தனுஷ் - தீவிர ஆலோசனை” : அரசியலில் கால்பதிக்க வியூகம்? : ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் சந்திப்பு..!

அரசியல் கால்பதிக்க ஆர்வம் காட்டி வரும் நடிகர் தனுஷ், டெல்லியில் முகாமிட்டு, பல்வேறு தரப்பினருடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
Actor Dhanush, shown interest in  politics, stationed in Delhi holding iconsultations with various groups
Actor Dhanush, shown interest in politics, stationed in Delhi holding iconsultations with various groupssource:thamizhalai,ai generated
2 min read

விஜய்யை போல தனுஷ் அரசியலில் ஆர்வம்

நடிகர் விஜய்யை தொடர்ந்து நடிகர் தனுஷ் அரசியலில் கால்பதிக்க ஆர்வம் காட்டி வருகிறாரு. ரசிகர் மன்​றங்​களை, நற்​பணி இயக்​க​மாக ஒருங்​கிணைச்சு, ரசிகர்​களை சமூக நலப் பணிகளில் ஈடு​படுத்​தும் நட​வடிக்​கைகளை தனுஷ் தீவிரப்​படுத்தி இருக்காரு.

அதுமட்டுமல்லாம, இரண்டு நாட்களா டெல்லியில் தங்கி இருக்கும்அவர், அரசியல்ல கால்பதிக்க வியூக நிபுணர்கள், முக்கிய தலைவர்களோட ஆலோசனை நடத்தி இருக்கிறதா சொல்லப்படுது.

எம்ஜிஆர், என்டிஆர்

இந்தியாவை பொருத்தவரை திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து பின்னர் அதிமுகங்கற கட்சிய தொடங்கி, தொடர் வெற்றிகளை குவிச்சவரு எம்ஜிஆர். அவர் வழியில ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தொடங்கி ஆட்சியை பிடிச்சாரு என்டிஆர்.

எம்ஜிஆர் வழியில் ஜெயலலிதா

எம்ஜிஆர் வழியில் ஜெயலலிதாவும் அதிமுகவை வழிநடத்தி, முதலமைச்சராகி இரும்பு பெண்மணியா திகழ்ந்தாங்க.

தனிக்கட்சி தொடங்கிய சிரஞ்சீவி

ஆந்திராவில சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சிய பிரமாண்டமா தொடங்கினாலும், பின்னர் காங்கிரசில் இணைந்து மத்திய அமைச்சராகி அரசியலில் இருந்து ஓய்வு வாங்கிட்டாரு.

தேமுதிக தொடங்கிய விஜயகாந்த்

தமிழகத்துல திமுக, அதிமுகவை எதிர்த்து தேமுதிக என்ற கட்சிய தொடங்கிய விஜயகாந்த், தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, அதிமுகவுடன் கூட்டணி அமைச்சதுல, எதிர்க்கட்சி தலைவராவும் ஆனாரு.

துணை முதல்வரான பவன் கல்யாண்

அவரது தம்பியான பவன் கல்யாண் ஜனசேனா கட்சிய தொடங்கி, படிப்படியாக உயர்ந்து, இன்னிக்கு ஆந்திர மாநில துணை முதல்வரா இருக்காரு.

அரசியலில் நடிகர்கள்

இவங்கள போல சிவாஜி கணேசன், டி. ராஜேந்தர், பாக்கியராஜ், சரத்குமார் போன்றவங்களுக்கு சில கட்சிகள இருந்து, தனியா கட்சி தொடங்கினாலும், பெரிய அளவில் வரவேற்பையும், வெற்றியையும் ஈட்டுவதில் தோல்வி அடைஞ்சாங்க.

பின்வாங்கிய ரஜினி காந்த்

அரசியலுக்கு வரற்தா பல ஆண்டுகள் தொடர்ந்து சொல்லிக்கிட்டு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உடல்நிலைய காரணம் காட்டி பின்வாங்குனாரு.

வெற்றிகளை குவித்த விஜய்

ஆனா, இவங்க எல்லாரையும் விட வித்தியாசமானவரு தான் நடிகர் விஜய், ரசிகர் மன்​றங்​களை, நற்​பணி இயக்​க​மாக மாத்தி, சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு, மாணவர்களுக்கு நிதியுதவி போன்றவற்றை செய்து, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினாரு.

முதல் தேர்தல், முதல்வரான விஜய்

மூன்றே ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலை தனிச்சு சந்திச்சது தவெக. அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என களமாடிய விஜய், 108 தொகுதிகளில வெற்றியை வசப்படுத்தினாரு.

முதல் தேர்தல், முதல் களம், முதல் வெற்றி, முதல்முறை ஆட்சி, நேரடியா முதல்வர் என இந்தியாவையே திரும்பி பார்க்க வச்சாரு விஜய்.

திராவிட கட்சிகள் படுதோல்வி

ஆளும் கட்சியா திமுக, எதிர்க்கட்சியா அதிமுக என்ற வலுவான கட்டமைப்பு கொண்டவங்க, தேர்தலில் ஈசியா தோற்கடிச்சாரு விஜய். திமுக கூட்டணியில இருந்து கட்சிகள் ஆதரவுக்கரம் நீட்ட, தமிழகத்தில முதன்முறையா கூட்டணி ஆட்சி அமைச்சு, முதலமைச்சரானார் விஜய்.

தனுஷ், சிவகார்த்திகேயன் ஆர்வம்

பெண்கள், இளைஞர்கள் கிட்ட அவருக்கு இருக்கும் ஆதரவு இடைத்தேர்தலிலும், வெற்றிக்கனியை பறிச்சு கொடுத்தது. விஜய்யை பின்பற்றி நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றவங்களும் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிங்க தெரிய வருது.

தமிழ் சினிமாவில முன்​னணி நடிக​ரான தனுஷ் அரசி​யலில் களமிறங்க உள்ள​தாக தினமும் சமூக வலை​தளங்​களி​லும், அரசி​யல் வட்​டாரங்​களிலும் தகவல்கள் வெளியாகி வருது. ரஜினிகாந்த் விட்ட இடத்த பிடிக்க தனுஷ் விரும்புறதா சொல்லப்படுது.

நற்பணிகளில் ரசிகர்கள் மன்றங்கள்

விஜய்யை போலவே ரசிகர் மன்​றங்​களை, நற்​பணி இயக்​க​மாக ஒருங்கிணைத்து, ரசிகர்​களை பல்​வேறு சமூக நலப் பணிகளில் ஈடு​படுத்​தும் நட​வடிக்​கைகளை தனுஷ் முடுக்கி விட்டிருக்காரு.

கட்சிக் கொடி அறிமுகம்?

தனுஷ் ரசிகர் மன்​றத்​தினர் சமூக நலப் பணிகளுக்​காகப் பயன்​படுத்தி வரும் சிவப்பு மற்​றும் வெள்ளை நிறக் கொடி, அரசி​யல் கட்​சி​யோட கொடியை போலவை இருப்பதா விமர்சனங்கள் எழுந்​தது.

ஆனா, இந்​தக் கொடி 10 ஆண்​டுகளுக்​கும் மேலாகப் பயன்​படுத்தி வர்றதா ரசிகர் மன்ற நிர்வாகிகள் விளக்கம் கொடுத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வச்சாங்க.

‘தமிழக எழுச்​சிக் கழகம்’

தனுஷின் பெயரில் ‘தமிழக எழுச்​சிக் கழகம்’ என்ற புதிய அரசி​யல் கட்சி பதிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாகத் தகவல்​கள் பரவி வரு​து. ஆனா, இதுபற்றி தனுஷ் தரப்​பி​லிருந்து இது​வரை எந்​த அதி​காரப்​பூர்வ தகவலும் வெளியாகலை.

டெல்லியில் தனுஷ் முகாம்

இந்​தச் சூழல்ல அரசி​யல் கட்சி தொடங்​கு​வது தொடர்​பாக டெல்லியில தங்கி இருக்கும் தனுஷ், முக்​கியப் பிர​முகர்​களைச் சந்​தித்து ஆலோ​சனை நடத்தி வர்றதா சொல்லப்படுது.

முக்கிய பிரமுகர்களுடன் தீவிர ஆலோசனை

முன்​னணி அரசி​யல் வியூக நிபுணர்​கள் மற்​றும் ஆலோ​சகர்​களைச் சந்​தித்து, தமிழக அரசி​யல் களத்​தில் கால் பதிப்​ப​தற்​கான சாத்​தி​யக்​கூறுகள், கட்​சி​யை கட்​டமைக்​கும் முறை மற்​றும் எதிர்​காலத் தேர்​தல் திட்​டங்​கள், வெற்றி வாய்ப்புக்கான வியூகங்கள் என்ன அப்படின்னு விவாதிச்சு வர்றதா தகவல்​கள் தெரி​விக்​கின்​றன.

சட்ட வல்லுநர்களுடன் சந்திப்பு

தேசி​யக் கட்​சிகளோட முக்​கியப் பிர​முகர்​கள், சட்ட வல்​லுநர்​களை அவர் கலந்து பேசி இருக்கிறதாவும், தமிழக அரசியல் சூழல், கட்சி கட்டமைப்புக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை பெற்று இருக்கிறதா தெரிகிறது.

ஞாயிறன்று ஆலோசனை கூட்டம்

அதுமட்டுமல்லாம, வரும் ஞாயிற்றுக்கிழமை, தனுஷ் நற்​பணி இயக்க நிர்​வாகி​கள் மற்​றும் மகளிர் அணி​யினர் பங்​கேற்​கும் சிறப்​புக் கூட்​டம் டை​பெற உள்​ள​தாகவும் கூறப்​படுது.

அப்போது ரசிகர்​களோடு தனுஷ் புகைப்​படம் எடுத்​துக்​ கொள்​வதுடன், இயக்​கத்​தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான ஆலோசனையில ஈடுபடவும் வாய்ப்பு இருக்கு.

எப்படி செயல்படுவார் தனுஷ்?

தனுஷ் கட்சி தொடங்கினா, தவெக எதிர்ப்பு அரசியல கையில் எடுத்தால் தான், தமிழக அரசியலில் தொடர்ந்து பயணிக்க முடியும்.

திராவிட கட்சிகள அவர் எதிர்ப்பாரா, தேசிய கட்சிகள பொருத்தவரை காங்கிரஸ் தவெக கூட்டணியில இருக்கு, அப்போ மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக மீது அவர் நிலைப்பாடு எப்படி இருக்கும் அப்படிங்க எதிர்பார்ப்பும் எழுந்து இருக்கு.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in