சமூக வலைதளங்களைப் பயன்படுத்த வயது கட்டுப்பாடு; மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Ashwini Vaishnaw : சமூக வலைதளங்களைப் பயன்படுத்த வயது கட்டுப்பாட்டு நடவடிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Age restriction for using social media: Union Minister Ashwini Vaishnaw
Age restriction for using social media: Union Minister Ashwini Vaishnawgoogle
1 min read

அஸ்வினி வைஷ்ணவ் மாநாட்டில் கூறியதாவது

Minister Ashwini Vaishnaw on Age Restriction for using Social Media : டில்லியில் நடந்து வரும் ஏஐ மாநாட்டில் பேசிய அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் ஏஐ மூலம் டீப் பேக் (Deepfake) வீடியோக்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாவும் பாதுகாப்பற்ற தன்மையையும் உருவாக காரணமாக இருந்து வருவதாகவும் தெரிவித்தார் .

கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும்

இதிலிருந்து நமது குழந்தைகளையும், சமூகத்தையும் பாதுகாக்கவும் கட்டுப்படுத்தவும் கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவது அவசியமாகும்.

நெட்பிளிக்ஸ், யுடியூப், மெட்டா அல்லது எக்ஸ் உள்பட எந்த நிறுவனமாக இருந்தாலும், அரசின் சட்டத்திற்குட்பட்டே செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசு பரிசீலனை

அந்தவகையில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கான வயது கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தல் தொடர்பானதை அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மத்திய அரசு இது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு டீப் பேக் விவகாரம் குறித்து பார்லி குழு விரிவாக ஆய்வு செய்துள்ளதாகவும் இது தொடர்பாக பார்லியில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தை உருவாக்கி கடுமையான நடவடிக்கைகள் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார் .

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in