AI Impact Summit 2026 : புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் : பிரதமர் மோடி உறுதி!

India AI Impact Summit 2026 : உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெறக்கூடிய முதல் உச்சி மாநாடு என்ற பெருமையை இந்த ஏஐ உச்சி மாநாடு பெற்றுள்ளது.
AI Impact Summit 2026: New technologies will improve India's economy: Prime Minister Modi assured!
AI Impact Summit 2026: New technologies will improve India's economy: Prime Minister Modi assured!source: Narendra Modi
2 min read

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் :

AI Impact Summit 2026: New technologies will improve India's economy: Prime Minister Modi assured : டெல்லியில் பிப்ரவரி 16 ஆம் தேதி ஏஐ உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த மாநாடு 16 ஆம் தேதி முதல் பிப். 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர்.

உலகலாவிய முதல் உச்சி மாநாடு

உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெறக்கூடிய முதல் உச்சி மாநாடு என்ற பெருமையை இந்த ஏஐ உச்சி மாநாடு பெற்றுள்ளது.

20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு

இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க வருகைத் தருமாறு பிரதமர் நரேந்திர மோடி இருபது நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை அழைத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, பிரான்ஸ், ஐக்கிய அமீரகம், சுலோவாக்கியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஏஐ உச்சி மாநாட்டிற்கு வருகை தருகின்றனர்.

டெல்லி மாநாட்டின் ஏஐ உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பாரத் மண்டபத்தில் சிறப்பு கண்காட்சியும் நடைபெற்றது.

ஏஐ- யால் பறிபோகும் வேலை

ஏஐ-யின் அதீத வளர்ச்சியால் இளைஞர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் உள்ளதாக ஓர் அச்சம் நிலவி வருகிறது.

இளைஞர்களிடையே இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் இந்த ஏஐ உச்சி மாநாடு அமைந்துள்ளது.

இளைஞர்களுக்கு ஊக்கமளித்த மோடி:

இது தொடர்பாக பிரதமர் மோடி இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக, ஏஐ தொழில்நுட்பம் நிச்சயமாக இளைஞர்களின் திறமையை பன்மடங்கு உயர்த்தும் என்று பேசியுள்ளார்.

பிரதமர் வலியுறுத்தல் :

சமீப காலமாக ஏஐ தொழிநுட்பத்தை தவறாக பயன்படுத்துவர்களின் எண்ணிகையும் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பத்தை மக்களின் நலனுக்காக , ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்.

அனைவரும் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

ஏஐ உச்சி மாநாட்டின் நோக்கம்

செயற்கை நுண்ணறிவு, பகுத்தறிவு, முடிவெடுக்கும் திறன் முதலானவை அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் சாமானிய மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றுகின்றன. இதுதான் ஏஐ உச்சி மாநாட்டின் நோக்கம்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எவ்வாறு அனைவரின் நலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைப்பது தான் இந்த ஏஐ உச்சி மாநாட்டின் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.

மாகாபாரதத்தின் வழி ஞானம்

இதை உணர்த்தும் விதமாக மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கும் அறிவு , ஞானம், தெளிவு தொடர்பாக இடம்பெற்றிக்கும் வசனங்களின் ஆடியோ பதிவுகளையும் தனது சமூக வலை தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் மோடி பகிர்ந்துள்ள ஆடியோ...

”வாழ்வில் புதியவைகளை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். அதன் மீது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். படிப்படியாக உங்கள் மனதில் அவற்றை ஆழமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

எதை கற்றுக் கொள்கிறீர்களோ அதன் உள்ளார்ந்த ஆழத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் முழுமையாக ஒன்றிணைப்பது தான் ஞானம்” என்று கூறப்பட்டுள்ளது.

திறமையை பன்மடங்காக்கும் வழி

ஏஐ தொழிநுட்பம் உங்கள் திறமை பன்மடங்கு பெருக வழி செய்யும். எதிர்காலத்தில் மக்கள் தங்கள் திறனை செயற்கை நுண்ணறிவின் வழி மேம்படுத்திக்கொள்வதில் அரசு முதலீடு செய்து வருவதாகவும், இதில் வரும் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உலகின் முதல் 3 வல்லரசு நாடுகளில் இந்தியா:

உலகின் முதல் 3 ஏஐ வல்லரசு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்றும் , டிஜிட்டல் இந்தியா, செயற்கை தொழிநுட்பம் முதலானவை இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலும் உலகளாவிய வளர்ச்சியிலும் நமது நாடு அடைந்து வரும் விரைவான முன்னேற்றத்திற்கும் இந்த நிகழ்வு ஒரு சான்றாகும் என்றும் பிரதமர் மோடி தனது சமூக வலை தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in