AI Impact Summit 2026 : இளைஞர்களே AI செயலியை உருவாக்குங்கள் : பிரதமர் மோடி அழைப்பு!

Prime Minister Narendra Modi Calls Youth For Create AI App : இளைஞர்கள் ஏஐ தொடர்பான செயலிகளை உருவாக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
India AI Impact Summit 2026: prime minister Narendra Modi call on youth create ai app
India AI Impact Summit 2026: prime minister Narendra Modi call on youth create ai appSource:Narendra Modi,x.com
1 min read

India AI Impact Summit 2026 :

Prime Minister Narendra Modi Calls Youth For Create AI App : டெல்லி பாரத் மண்டபத்தில் உலகளவிலான தெற்கு பிராந்தியத்தின் முதல் AI Impact Summit 2026 பிப். 16ஆம் தேதி தொடங்கி பிப். 21ஆம் தேதி வரை நடக்கிறது.

இந்த ஏஐ உச்சி மாநாட்டில் 3 இந்திய நிறுவனங்கள் தஙகளது ஏஐ மாதிரி செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி இளைஞர்கள் ஏஐ தொடர்பான செயலிகளை உருவாக்க வேண்டும் என்றும் அதற்காக இளைஞர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறியுள்ளார்.

ஏஐ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது

புதிய தொழில்நுட்பக்களை உருவாக்குவது மட்டுமல்ல அதை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் திறமை வாய்ந்தது இந்தியா. ஏனெனில் இந்தியா மிகப்பெரிய இளைஞர் படையைக் கொண்டுள்ளது.

தீர்வு காண முதவும் AI

தற்போது இந்த ஏஐ மாநாட்டில் 3 இந்திய நிறுவனங்கள் ஏஐ செயலிகளின் மாதிரியை அறிமுகப்படுத்தி உள்ளனர். ஏஐ தொழில்நுட்பம் என்பது மிகப்பெரிய மாற்றத்தை , தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி.

அதனால் ஏஐ -யை நல்லமுறையில் நன்றாக பயன்படுத்தினால் பல தீர்வுகளை காண முடியும் என்று பேசியுள்ளார்.

இளைஞர்களுக்கு அழைப்பு

மேலும், ஏஐ தொழிமுறையை நன்முறையில் செயல்படுத்தவும், ஏஐ சார்ந்த செயலிகளை உருவாக்கவும் இளைஞர்களை அழைக்கிறேன்.

ஏஐ தொழில்நுட்ப துறையில் இந்தியாவிற்கு மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது என்றும் பேசியுள்ளார்.

AI -ஆல் நிலவும் அச்சம்

தொடர்ந்து பேசிய பிரதமர், சமூக ஊடகங்களில் வலம்வரும் போலியான AI வீடியோக்கள், பதிவுகளால் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

இதனால் AI மீது நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. ஆனால் அதே சமயம் மற்றொறு பக்கம் சிலர் AI-யை நல்ல முறையில் பயன்படுத்தி சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குகின்றனர்.

AI -ஆல் புதிய வேலை வாய்ப்பு

ஏஐ தொழில்நுட்பத்தை திறம்பட செயல்படுத்தினால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

AI மாநாடு: பங்கேற்பாளர்கள் அல்ல முன்னோடி

ஏஐ நாம் செய்யும் வேலைகளை மிகச் சிறந்ததாகவும் துள்ளியமான தரவுகளுடன் திறமையாகவும் மாற்றும் என்றும் ஏஐ மாநாடு, தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் நாம் பங்கேற்பாளர்கள் அல்ல முன்னோடி என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in