Operation Sindoor : பாக். போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

Pakistani Jets Attack in Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் தெரிவித்தார்.
Air Force Chief Marshal A.P. Singh About 6 Pakistani Fighter Jets Shot Down during Operation Sindoor
Air Force Chief Marshal A.P. Singh About 6 Pakistani Fighter Jets Shot Down during Operation Sindoor
1 min read

ஆபரேஷன் சிந்தூர் :

Pakistani Jets Attack in Operation Sindoor : காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்ற, தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா கையில் எடுத்தது. பாகிஸ்தானுக்குள் சுமார் 100 கி.மீ. ஊருடுவிய போர் விமானங்கள், பயங்கரவாதிகளை முகாம்களை தகர்த்து வெற்றிகரமாக திரும்பின. இதுதொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

வீழ்த்தப்பட்ட பாக். போர் விமானங்கள் :

இந்தநிலையில், பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங்(IAF Chief AP Marshal), ” பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதன் புகைப்படங்களை பார்வையாளர்களுக்கு திரையில் காண்பித்து விளக்கினார்.

பாகிஸ்தானின் பஹவல்பூரில் இருந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தின் தலைமையகத்தை நாங்கள் தாக்குவதற்கு முன்பும் தாக்கிய பின்பும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. தற்போது இங்கே எந்த தடையமும் இல்லை. துல்லியமாக தாக்குதல் நடத்தினோம்.

கேம் சேஞ்சராக எஸ்-400 :

நமது விமானப்படைத் பாதுகாப்பு அமைப்புகள் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளன. நாங்கள் சமீபத்தில் வாங்கிய எஸ்-400 அமைப்பு, ஒரு கேம் சேஞ்சராக இருந்து வருகிறது. அந்த அமைப்பின் வீச்சு, பாகிஸ்தானிடம் உள்ள நீண்ட தூர சறுக்கு குண்டுகள், போர் விமானங்கள் ஆகியவற்றை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியது. எஸ்-400ஐ அவர்களால் ஊடுருவ முடியாததால் அவர்களின் ஆயுதங்களை நமக்கு எதிராக பயன்படுத்த முடியவில்லை.

மேலும் படிக்க : ஆபரேஷன் சிந்தூர் : என்டிஏ எம்பிக்கள் மோடிக்கு பாராட்டு

பாக் போர் விமானங்கள் அழிப்பு :

ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் நீண்ட காலமாக செயல்பட்ட 6 பயங்கரவாத முகாம்கள் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் விமானப்படைக்கு(Pakistan Air Force) சொந்தமான 6 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இவற்றில் 5 போர் விமானங்கள், மற்றொன்று மிகப்பெரிய அளவிலான ராணுவ விமானம் ஆகும். விமான நிலைய ஹேங்கரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எப் 16 ரக போர் விமானங்களும் விமானப்படை தாக்குதலில் சுக்கு நுாறாக நொறுங்கின. மிகக்சிறப்பாக திட்டமிடப்பட்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது” இவ்வாறு விமானப்படை தளபதி ஏ.பி. சிங் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in