விமான விபத்தில் சிக்கிய பயணிகள் : விவரங்கள் வெளியீடு

அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய பயணிகள் குறித்த முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
விமான விபத்தில் சிக்கிய பயணிகள் :  விவரங்கள் வெளியீடு
https://x.com/airindia/status/1929783274794012988/photo/3
1 min read

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 142 பயணிகளுடன் லண்டன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், கிளம்பிய சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது.

குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து வெடித்து சிதறியதால், அந்தப் பகுதியே போர்க்களம் போன்று காட்சி அளிக்கிறது.

மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், விமானத்தில் பயணித்தவர்கள் குறித்த முதல் தகவலை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, விபத்துக்குள்ளான போயிங் 787 விமானத்தில் 242 பயணிகள் இருந்தனர்.

அவர்களில், 169 பேர் இந்தியர்கள், 43 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள்.7 பேர் போர்ச்சுல், ஒருவர் கனடா நாட்டை சேர்ந்தவர்.

காயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பயணிகள் தேவைக்காக 1800 5691 444 என்ற உதவி எண் செயல்படுகிறது.

-----

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in