மகாராஷ்டிரா பாராமதி இடைத்தேர்தல் : அஜித் பவார் மனைவி சுநேத்ரா போட்டியின்றி வெற்றி : கடைசியில் விலகிய காங்கிரஸ்!

மகாராஷ்டிர மாநிலம் பாராமதி இடைத்தேர்தலில், அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் போட்டியின்றி வெற்றி பெறுகிறார்.
Ajit Pawar's wife Sunetra Pawar win unopposed in the Baramati by-election in Maharashtra
Ajit Pawar's wife Sunetra Pawar win unopposed in the Baramati by-election in Maharashtragoogle
1 min read

அஜித் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமாக இருந்தவர் அஜித் பவார். ஜனவரி 28ம் தேதி நிகழ்ந்த விமான விபத்தில் அவர் உயிரிழந்தார்.

துணை முதல்வரான சுநேத்ரா பவார்

இதைத்தொடர்ந்து மறைந்த அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக, துணை முதல்வராகவும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்மூலம் மகாராஷ்டிரா வரலாற்றில் துணை முதல்வர் பதவி வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

இடைத்தேர்தலில் போட்டி

அஜித் பவார் எட்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியான பாராமதியிலிருந்து சுனேத்ரா பவார் இடைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் ஆகாஷ் மோரே களமிறக்கப்பட்டார்.

ஏப். 23 பாரமதி இடைத்தேர்தல்

வரும் 23ம் தேதி பாரமதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. சுநேத்ரா பவாரை போட்டியின்றி வெற்றி பெறச் செய்ய, தேசியவாத காங்கிரஸ், பாஜக முயற்சி மேற்கொண்டன.

போட்டியின்றி வெற்றி

இதற்கு உரிய பலன் கிடைத்து இருக்கிறது. இடைத்தேர்தலில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி உள்ளது.

போட்டி வேட்பாளர் யாரும் இல்லாததால், பாரமதியில் வெற்றி பெற்ற சட்டமன்றம் செல்கிறார் சுநேத்ரா பவார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 4ம் தேதி வெளியாகும்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in