
அமர்நாத் புனித யாத்திரை :
Amarnath Yatra 2025 Updates : காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும், யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. காஷ்மீர் அரசும், மத்திய அரசும் இணைந்து பக்தர்கள் வசதி, பாதுகாப்பிற்காக விரிவான ஏற்பாடுகள் செய்கின்றன. ராணுவத்தினரும் மற்ற பாதுகாப்பு படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு யாத்திரை சுமூகமாக நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது.
பனிி வடிவில் சிவலிங்க தரிசனம் :
அமர்நாத் குகை, பனிப்பாறைகள் , பனி மலைகளால் சூழப்பட்டுள்ளது ஆண்டின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டிருக்கும், கோடையில் ஒரு குறுகிய காலம் யாத்ரீகர்களுக்கு திறந்திருக்கும். 1989ம் ஆண்டில், யாத்ரீகர்களின் எண்ணிக்கை 12,000 முதல் 30,000 வரை இருந்தது.
2011ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை உச்சத்தை எட்டியது, அதாவது 6.3 லட்சம் பேர் புனித யாத்திரை மேற்கொண்டனர். இந்தநிலையில், அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடங்கி உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு முன்பு யாத்திரை வருவதற்கு 2.36 லட்சம் பேர் முன் பதிவு செய்திருந்தனர்.
கூடுதல் யாத்ரீகர்கள் பயணம் :
பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி, அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக புனித யாத்திரை வரும் பக்தர்களிடம் நம்பிக்கை ஏற்பட்டது. அதன் விளைவாக முன்பதிவுகள் அதிகரித்து இருக்கிறது.
பாதுகாப்புக்காக சுமார் 600 கூடுதல் துணை ராணுவப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. முதல் குழுவை ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
பால்டால் முதல் குகைக் கோயிலுக்குச் செல்லும் பாதை வரை, இதுவரை இல்லாத வகையில், இந்தாண்டு பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. யாத்ரீகர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.
=====