சர்ச்சையில், ”E20, reservation hatao andolan” புதிய இயக்கங்கள் : பல லட்சம் பேர் பின்தொடர்வு...

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை தொடர்ந்து , சமூக வளைத்தளங்களில் , இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கம், E20 ஜனதா கட்​சி போன்ற இயக்கங்கள் சமூக வளைத்தளங்களில் சர்ச்சையை சந்தித்து வருகிறது F
Amidst controversy, new movements like "E20" and "Reservation Hatao Andolan"
Amidst controversy, new movements like "E20" and "Reservation Hatao Andolan" google
1 min read

சர்ச்சையில் புதிய இயக்கங்கள்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை தொடர்நது சமூக வளைத்தளங்களில் , இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்​கம்,E20 ஜனதா கட்சி போன்ற சமூக வலைத்தள கணக்குகள் உருவாக்கப்பட்டு , பல லட்சகணக்கான பின் தொடர்பாளரக்ளுடன் தற்போது பேசுபொருளாகியுள்ளது

கேளிக்கையாக உருவாக்கப்பட்ட கட்சி , உலகளவில் கவனம் ஈர்ப்பு

தலைமை நீதிபதி சூர்ய காந்​தி நாட்டின் இளைஞர்களை கரப்பான பூச்சி மற்றும் ஓட்டுண்ணிகளுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்,இதனையொட்டி அபிஜித் தீப்கே என்பவரால் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி cjp என்ற கட்சி உருவாக்கப்பட்டது , இந்த சிஜேபி கட்சியானது

நீட் தேர்வு முறைக்கேடுகளுக்கு எதிராக டெல்லி 35 நாட்களுக்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை மேற்கொண்டது , சிஜேபியின் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டார்,இவரின் இந்த உண்ணாவிரதம் போராட்டத்திற்கு கூடுதல் வலுசேர்தது,

சிஜேபியின் போராட்டம் அடி பணிந்த மத்திய அரசு

35 நாட்களுக்கும் போராடிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திஞ் மூன்று கோரிக்கையான மத்திய கலவி அமைச்சர் பத்வி விலக வேண்டும், நீட் தேர்வு முறைக்கேடுவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுகொண்டு சிஜேபியின் கோரிக்கையிஅ நிறைவேற்றியது

இந்த போராட்டம் உலகளவில் ஒரு ஜென்ஸி போராட்டமாக உருவெடுத்தது

இந்த நிலையில் E20 ஜனதா கட்சி மற்றும் ,இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கம் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது

E20 ஜனதா கட்சி

பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் மத்திய அரசின் கொள்கைக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு நிலவி வரும் சூழலில் , அந்த எதிர்ப்பை ஒருங்கிணைக்கும் வகையில் E20 ஜனதா கட்சி என்ற கட்சி உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பல லட்சகணக்கான பாலோயர்களை கொண்டுள்ளது

இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்​கம்

சிஜேபி மற்றும் ,E20 ஜனதா கட்சியை தொடர்ந்து ,இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்​கம் என்ற ரிசர்வேஷன் ஹட்டாவோ அந்தோலன் என்ற இயக்கம் இன்ஸ்டாகிராமில் உருவாக்கப்பட்டு , பல மில்லியன் கணக்கான பாலோயர்களை இந்த சமூக வலைதள கணக்கு கொண்டுள்ளது ,

இந்த சூழலில் இந்த கணக்கு பெரும் சர்ச்சையையும் , எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது , இந்த கணக்கை தொடங்கியவர் யார் என்ற தகவல் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது , இருப்பினு இந்த இரு கட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

================================

logo
Thamizh Alai
www.thamizhalai.in