நீண்டகாலம் உள்துறை அமைச்சர் : அத்வானி சாதனையை முறியடித்த அமித் ஷா

Longest Serving Home Minister Amit Shah Of India : இந்தியாவின் நீண்ட கால உள்துறை அமைச்சர் என்ற பெருமை அமித் ஷாவுக்கு கிடைத்து இருக்கிறது.
Longest Serving Home Minister Amit Shah Of India
Longest Serving Home Minister Amit Shah Of India
1 min read

மோடியின் நம்பிக்கைக்குரிய நண்பர் :

Longest Serving Home Minister Amit Shah Of India : குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமித் ஷா அம்மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராகவும் இருந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்கு உரிய நபராக எல்லோராலும் அறியப்படுகிறார். பிரதமர் மோடி தான் எடுக்கும் எந்த முடிவு குறித்தும் அமித் ஷாவுடன் தான் முதலில் கலந்து ஆலோசிப்பார் எனக் கூறப்படுகிறது.

2019 முதல் உள்துறை அமைச்சர் :

2019ம் ஆண்டு மே 30 தேதி மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அமித் ஷா. அவர் நேற்று வரை 2,258 நாட்​கள், அதாவது 6 ஆண்​டு​கள் 68 நாட்​கள் உள்துறை அமைச்சர் பதவியில்(Home Minister Post) இருந்துள்ளார். இதன்மூலம் நாட்​டின் மிக நீண்​ட​கால உள்​துறை அமைச்​சர்(Longest Serving Home Minister) என்ற பெரு​மை அமித் ஷாவுக்கு கிடைத்து இருக்கிறது.

அத்வானி சாதனை முறியடிப்பு :

பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானியும்(LK Advani) மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அவரது சாதனையை அமித் ஷா(Amit Shah) முறியடித்து இருக்கிறார். அதன்படி, 1998 மார்ச் 19 முதல் 2004 மே 22 வரை அத்வானி உள்துறை அமைச்சராக இருந்தார். அதாவது 2,256 நாட்​கள். கோவிந்த் வல்லப பந்த் 6 ஆண்​டு​கள் 56 நாட்​கள், 1955 ஜனவரி 10 முதல் 1961 மார்ச் 7 வரை இப்​ப​தவியை வகித்​தார்.

மேலும் படிக்க : உலகின் அதி நம்பிக்கையான தலைவர் : 75 புள்ளிகளுடன் முதலிடத்தில் மோடி

சாதித்து காட்டிய அமித் ஷா :

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், உள்துறை அமைச்சராக அமித் ஷாவின் சாதனைகளை ஏராளம். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, புதிய குற்றவியல் நீதிச் சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டம் அமல், வடகிழக்கு மாநில பிரச்சினைகளுக்கு ஒப்பந்தங்கள் மூலம் தீர்வு, நக்சல் பிரச்சினை பெருமளவில் குறைந்துள்ளது, காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டு இருக்கிறது.

------

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in