
Amit Shah Exclusive Interview : ஆங்கில தொலைக்காட்சி ஒன்று பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தற்போதைய அரசியல் சூழல், நாடாளுமன்ற கூட்டத்தொடர், துணை ஜனாதிபதி தேர்தல் உட்பட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
சாக்குபோக்கை தேடும் எதிர்க்கட்சிகள் :
நாடாளுமன்றத்துக்குள் சபாநாயகர் அனுமதி மற்றும் உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே, CISF எனப்படும் மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளே வருவார்கள். எதிர்க்கட்சிகளுக்கு குற்றம் சுமத்த ஏதாவது சாக்குபோக்கு தேவை. பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே அவர்கள் விரும்புகிறார்கள். தொடர் தேர்தல் தோல்விகளால் எதிர்க்கட்சிகள் விரக்தியில் இருக்கின்றன.
சிறையில் இருந்து ஆட்சி நடத்துவதா? :
நான் நாட்டு மக்களையும், எதிர்க்கட்சிகளையும் பார்த்து ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஒரு முதல்வர், பிரதமர் அல்லது எந்த தலைவரும் சிறையில் இருந்து நாட்டை வழி நடத்த முடியுமா? அது நமது ஜனநாயகத்தின் கண்ணியத்திற்கு ஏற்றதா? 130வது திருத்தம் பற்றி நான் முழு நாட்டிற்கும் சொல்ல விரும்புகிறேன். இந்த திருத்தத்தில் பிரதமர், முதல்வர் அல்லது மாநில அரசாங்கத்தின் எந்த தலைவரும் சிறை சென்றால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
பிரதமரும் விதிவிலக்கு அல்ல :
இதில் யாருக்கும் சலுகை என்பதே இருக்காது. அவர்கள் ராஜினாமா செய்யவில்லை என்றால், அவர்கள் சட்டப்படி பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். இதை தான் 130வது திருத்தத்தில்(130th Constitutional Amendment Bill) நாங்கள் சேர்த்துள்ளோம்.
பதவி நீக்க மசோதா நிச்சயம் நிறைவேறும் :
ராகுல் காந்தி பிகாரில் ஆட்சி அமைக்க தண்டனை பெற்ற லாலு யாதவை கட்டிப் பிடிக்கிறார். இது இரட்டை நிலைப்பாடு இல்லையா? காங்கிரஸ் கட்சியினர் மக்களிடையே ஒருவித மாயையை உருவாக்க விரும்புகிறார்கள். அவர்களால் நிச்சயம் வெற்றிபெற முடியாது.
மேலும் படிக்க : ’ராகுல் PM, உதயநிதி CM’ வெறும் கனவுதான் : அமித் ஷா திட்டவட்டம்
ஜெக்தீப் தன்கர் ராஜினாமா விவகாரம் :
முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா விவகாரம்(Jagdeep Dhankhar Resignation Reason) குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், உடல்நல பிரச்சினையால் தனிப்பட்ட முறையில் தான் ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பு விதிப்படி தன்கர் சிறப்பாக பணியாற்றினார். ஜக்தீப் தன்கரின் ராஜினாமாவுக்கு வேறு காரணங்களைத் தேடுவது சரியானது கிடையாது” இவ்வாறு அமித் ஷா(Amit Shah Interview in Tamil) பேட்டியளித்தார்.
================