நீதித்துறையில் டிஜிட்டல் புரட்சி : அமித் ஷா பெருமிதம்

Amit Shah About New Criminal Laws : புதிய குற்றவியல் சட்டங்கள் அமலான ஓராண்டில் 35.18 லட்சம் எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்
Amit Shah  lauds New Criminal Laws
Amit Shah on New Criminal Lawshttps://x.com/AmitShah
2 min read

ஆங்கிலேயர் காலத்து குற்றவியல் சட்டங்கள் :

Amit Shah About New Criminal Laws: சுதந்திர இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவையே குற்றவியல் நீதி அமைப்பின் அடித்தளமாக இருந்தன.

காலனித்துவ சட்டங்கள் ஆட்சியாளர்களின் நலனை மையமாகக் கொண்டவையாக இருந்ததாலும், காலப்போக்கில் மாறிவரும் சமூகச் சூழலுக்கு ஏற்புடையதாக இல்லாததாத குறைபாடாக இருந்தது.

சவாலை அளித்த பழைய சட்டங்கள் :

குறிப்பாக நீதி வழங்குவதில் காலதாமதம், நிச்சயமற்ற தன்மை மற்றும் சாமானியர்களுக்கு இருந்த அணுகல் குறைபாடு போன்ற பல சவால்களை ஏற்படுத்தின.

இதை மாற்றியமைத்து, மக்களை மையமாகக் கொண்ட புதிய நவீன நீதி அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், மத்திய பாஜக அரசு மூன்று சட்டங்களுக்கும் மாற்றாக புதிய சட்டங்களைக் கொண்டுவந்தது. இந்த புதிய சட்ட சீர்திருத்தம் அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்து இருக்கிறது.

புதிய குற்றவியல் சட்டங்கள் :

இதை முன்னிட்டு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘புதியதாக கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டங்கள் நாட்டின் நீதி வழங்கும் முறையை மாற்றி அமைக்கத் தொடங்கி இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிடா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய மூன்று புதிய சட்டங்களும் வெறும் சட்டத் திருத்தங்கள் அல்ல; மாறாக தொழில்நுட்பத்தின் உதவியுடன் மக்களை மையப்படுத்திய நீதி அமைப்புக்கான மாபெரும் சாதனை எனக் குறிப்பிட்டார்.

நீதித்துறையில் டிஜிட்டல் புரட்சி :

காலனித்துவ மரபிலிருந்து விடுபட்டு, மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் நீதி அமைப்புக்கு இந்தியா மாறுவதற்கான அடித்தளமாக இந்த சீர்திருத்தம் இருக்கும். இனிமேல் நாட்டின் எந்த மூலையில் குற்றம் நடந்தாலும், மூன்று ஆண்டுகளுக்குள் நீதி கிடைக்கும்” என்று உறுதியளித்தார்.

மேற்கண்ட புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்து ஓராண்டில், 8.61 லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்கள், 43,000க்கும் அதிகமான சிறைத்துறை ஊழியர்கள், 11,000க்கும் மேற்பட்ட நீதித்துறை அதிகாரிகளுக்குப் புதிய சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

35 லட்சம் எப்ஐஆர்கள் பதிவு :

புதிய சட்டங்களின் கீழ் 35.18 லட்சம் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்கு தடயவியல் சான்றுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

14,000க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களும், 22,000 நீதிமன்றங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, விசாரணை தொடர்பான தகவல்கள் புகார்தாரர்களுக்கு 90 நாட்களுக்குள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படுகின்றன. இந்த சீர்திருத்தங்கள் சாமானிய மக்கள் எளிதில் நீதித்துறையை அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

மக்களை நோக்கி நீதித்துறை :

இனிமேல் மக்கள் எங்கிருந்தும் ‘ஜீரோ எப்ஐஆர்’ மற்றும் ‘இ-எப்ஐஆர்’ பதிவு செய்ய முடியும். குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் விகிதம் 91.1% ஆக உயர்ந்துள்ளது. மேலும், சராசரி விசாரணை காலம் 110 நாட்களாகக் குறைந்துள்ளது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in