

ஆந்திராவில் நலத்திட்ட உதவிகள்
Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu has set a Guinness World Record by distributing e-cycles to 5,555 women in a single day : அண்டை மாநிலமான ஆந்திராவில் தெலுங்கு தேசம் சார்பில் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. மூத்த குடிமகன்கள் (வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும்), கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகளுக்கு தலா ரூ.4 ஆயிரம், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம், கடும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தலா ரூ.15,000 என ஒவ்வொரு மாதமும் சரியாக 1ம் தேதி வழங்கப்படுகிறது.
பெண்களுக்கு இ-சைக்கிள்கள்
முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குப்பம் தொகுதியில் உள்ள சாந்திபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவி குழுவினருக்கு மொத்தம் 5,555 இ-சைக்கிள்களை வழங்கினார்.
கின்னஸ் சாதனை
சந்திரபாபு நாயுடு, மகளிர் உட்பட அனைவரும் சுமார் 3 கி.மீ தூரம் பொதுக்கூட்ட மேடை வரை சைக்கிளில் வந்தனர். 5555 இ-சைக்கிள்கள் விநியோகம், 3 கி.மீ. தூரம் வரை அனைவரும் அதனை ஓட்டியபடி வந்தது என்பது கின்னஸ் சாதனை என கூறி, அங்கிருந்த கின்னஸ் புத்தக பிரதிநிதிகள் அதற்கான சான்றிதழை வழங்கினார்.
ஒரே நாளில் 5,555 இ-சைக்கிள்களை வழங்கியதற்காக அவர் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது.
குப்பத்தில் அசெம்பிள் செய்யப்படும் மின்-சுழற்சிகளை கொண்டு பணம் செலவில்லாமல் கூரை சோலார் பேனல்கள் மூலம் இ-சைக்கிள்களை சார்ஜ் செய்யலாம்.
மேலும் அவற்றில் அறுபது கிலோமீட்டர் தூரம் பயணிக்கலாம்.
வரலாற்றை உருவாக்கி இருக்கிறோம்
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘கடந்த காலங்களில் ஒரே நேரத்தில் 3,000 இ-சைக்கிள் வழங்கி கின்னஸ் சாதனையில் இடம்பெற்றோம்.
தற்போது அந்த சாதனையை முறியடித்து 24 மணி நேரத்தில் 5,555 சைக்கிள்களை வழங்கி குப்பத்தில் மீண்டும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று வரலாற்றை உருவாக்கியுள்ளோம்.
சூப்பர் சைக்கிள்கள்
வரும் காலங்களில் இ-சைக்கிள்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இ-சைக்கிள்களுக்கு சூப்பர் சைக்கிள் என்று பெயரிட்டுள்ளோம்.
இதனால் 60 கி.மீ வரை வேலைக்கு எளிதாகச் செல்லலாம். மாணவர்கள் குறைந்த செலவில் பாதுகாப்பாக பயணிக்க முடியும்.
மாதம் ரூ.1,500 சேமிப்பு
இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை மிச்சமாகும்” என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
===========