
தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம் :
தமிழகத்தில் ஏற்கனவே, பெண்களுக்கு கட்டணமின்றி பேருந்து சேவை திட்டம் அமலில் உள்ளது. இதேபோன்று ஆந்திராவிலும் இதுபோன்ற திட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தெலுங்கு தேசம் கட்சி வாக்குறுதி அளித்து இருந்தது.
’ஸ்தீரி சக்தி’ பெண்களுக்கு இலவச பஸ் சேவை :
சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - பா.ஜ., - ஜனசேனா கூட்டணி ஆட்சி அமைந்தது. அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில்,
'ஸ்தீரி சக்தி' என்ற பெயரில் பெண்களுக்கான இலவச பஸ் சேவை திட்டத்தை தலைநகர் அமராவதியில் முதல்வர சந்திரபாபு நாயுடு துவக்கி வைத்தார்.
பேருந்தில் பயணித்த முதல்வர், துணை முதல்வர் :
பெண்களுடன் சேர்ந்து சந்திரபாபு நாயுடு, அவரது மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ், துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பேருந்தில் பயணம் செய்தனர். ஆந்திர மாநிலத்தில் வசிக்கும் சிறுமியர், பெண்கள், திருநங்கையர் இந்த திட்டத்தின் வாயிலாக பயன் பெறுவார்கள்.
2.62 கோடி பெண்கள் பயன்பெறுவர் :
திருநங்கையர் பயணத்தின் போது, தங்களின் அடையாள அட்டையை காண்பித்தல் அவசியம் என் றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வாயி லாக மாநிலம் முழுதும் 2.62 கோடி பெண்கள் பயனடைவார்கள்.
அரசு வசம் உள்ள, 11,449 பஸ்களில், 74 சதவீத பேருந்துகள் இந்த திட்டத்தின் கீழ் இயக்கப்படும் என ஆந்திர போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது. இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு 1,942 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
===============