மேலும் ஒரு இந்தியர் (இந்து) தீ வைப்பு:வங்கதேசத்தில் என்ன நடக்கிறது

வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்துவை தாக்கி தீ வைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Another incident of an attempted attack and arson on a Hindu in Bangladesh
Another incident of an attempted attack and arson on a Hindu in BangladeshANI
1 min read

வங்கதேசத்தில் வன்முறை

another Hindu man, set on fire by miscreants in Shariatpur Bangladesh, chaos continued அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்தாண்டு வெடித்த மாணவர்கள் போராட்டங்களை தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி, இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது அங்கு , நோபல் பரிசு பெற்ற முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சிப் பொறுப்பில் உள்ளது.

இந்துக்கள் மீது தாக்குதல்

யூனஸ் பதவியேற்றது முதல் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது, அவர்களுக்கு உரிய கோவில்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் ( பிப்ரவரி ) வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் பதற்றத்தை அதிகரித்து வருகின்றன.

தீ வைப்பு சம்பவங்கள்

கடந்த மாதம் வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்துக்களை தேடிப்பிடித்து தாக்குவதுடன், அவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

இந்துக்கள் 3 பேர் படுகொலை

வங்கதேசத்தில் உள்ள 30 மாவட்டங்களில், 70க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில், மூன்று இந்துக்கள் கொல்லப்பட்ட நிலையில் , நேற்று முன்தினம் மேலும் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்டார்.

மேலும் ஒரு இந்து தீ வைத்து எரிப்பு

ஷரியத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொகோன் தாஸ், 50, என்பவர் தன் வீட்டிற்கு சென்றபோது, வழிமறித்த கும்பல் ஒன்று, கூர்மையான ஆயுதங்களால் அவரை தாக்கியது. பின், தாசை தீ வைத்து எரித்துவிட்டு தப்பியோடியது. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில், சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வங்கதேசத்தில் பதற்றம்

புத்தாண்டுக்கு முந்தைய இரவு நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதல், வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் மத்தியில் அதிர்ச்சியையும், பீதியையும் அதிகரித்துள்ளது. இந்திய எதிர்ப்பு உணர்வை மையப்படுத்தி, முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதை தடுக்க வேண்டிய இடைக்கால அரசு மவுனம் காப்பது, இருநாட்டு நல்லுறவில் விரிசலை மேலும் அதிகரித்து இருக்கிறது.

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in