
விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனம் :
AP CM Chandrababu Naidu on Visakhapatnam Google AI Hub in India : அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கூகுள் நிறுவனம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தகவல் மையத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைக்க இருக்கிறது. இதற்காக அந்த நிறுவனம் 15 மில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1.2 லட்சம் கோடியை முதலீடு செய்கிறது.
டிஜிட்டல் சேவையில் பெரும் புரட்சி
உலக அளவில் கிளவுட் சேவைகள், ஏஐ உட்கட்டமைப்புக்கான தேவைகள் அதிகரித்து வரும் சூழலில், கூகுளின் இந்த பிரமாண்ட முதலீடு, இந்தியாவின் டிஜிட்டல் சேவையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி போகிறது. இதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் சேவை வரும் காலத்தில், பெரிய அளவில் வளர்ச்சி பெறும்.
உலகத்தரம் வாய்ந்த ஏஐ நிபுணர்கள்
உலகத்தரம் வாய்ந்த ஏஐ நிபுணர்கள் இங்கு பயிற்சி பெறுவார்கள். மென்பொருள் பொறியாளர்கள், முக்கிய துறைகளின் நிபுணர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். பணியாற்ற 24 மணி நேரமும் நிபுணர்கள் தேவை என்பதால், வேலைவாய்ப்புகளும் பெருகும். இளைஞர்களுக்கு உடனடி வேலை கிடைக்கும். ஆந்திராவில் ஏஐ கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும். இதன் மூலம் ஆந்திரா மட்டும் இன்றி, தென்னிந்தியாவின் பெரும் வளர்ச்சிக்கு வித்திட்டு இருக்கிறார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
சாதித்து காட்டும் சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஒன்றரை லட்சம் கோடிக்கு மேலான முதலீடுகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈர்த்து இருக்கிறார். மத்திய பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும், மத்திய அரசு மூலம் முழுமையாக பெற்று வருகிறது.
மேலும் படிக்க : Google: ஏஐயுடன் இந்தியாவில் கூகுள்? விசாகப்பட்டினம் தான் டார்கெட்!
கூகுளின் ஏஐ தொழில்நுட்ப மையம், விசாகப்பட்டினம் நகரை பெரிய அளவில் மாற்றி அமைக்க போகிறது. கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள், அதற்காக விசாகைக்கு படையெடுக்கும் இளைஞர்கள், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் என இனி வரும் ஆண்டுகளில் உலக வரை படத்தில் விசாகப்பட்டினத்தின் பெயர் முக்கிய இடம் பெற இருக்கிறது. இவை அனைத்திற்கும் காரண கர்த்தாவாக இருந்து, ஆந்திர வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறார் முதல்வர் சந்திரபாபு நாயுடு
=======================