'இந்தியா’ கூட்டணிக்கு ஆம் ஆத்மி குட்பை : இனி தனித்தே போட்டி

AAP Quits INIDA Alliance : இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, அனைத்து மாநிலங்களிலும் தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளது.
Arvind Kejriwals Aam Aadmi Party Exit From INDIA Alliance 2025
Arvind Kejriwals Aam Aadmi Party Quits From INDIA Alliance 2025
2 min read

இந்தியா கூட்டணி :

AAP Quits INIDA Alliance : மக்களவை தேர்தலுக்கு முன்பு தொடங்கப்பட்டது தான் இந்தியா கூட்டணி. தேசிய கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் இதில் அங்கம் வகிக்கின்றன. தொடக்கத்தில் இருந்தே இந்தக் கூட்டணியில் சிக்கல் நீடித்து வருகிறது. கூட்டணிக்கு தலைமையேற்பார் என்று கருதப்பட்ட நிதிஷ்குமார் முதல் ஆளாக வெளியேறி, மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கைகோர்த்தார்.

காங்கிரசுடன் மோதும் மாநில கட்சிகள் :

தேசிய கட்சியான காங்கிரசுடன் மாநிலக் கட்சிகள் ஒத்துப் போவதில் சிக்கல் எழுந்தது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியால் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முடியவில்லை. எதிர்த்தே போட்டியிட வேண்டி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரசும் காங்கிரசை எதிர்த்து கொடி பிடித்தே அதிக இடங்களில் வெற்றி பெற்றது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரசை எதிர்த்தாலும் அங்கு ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, மண்ணை கவ்வி, ஆட்சியை பாஜகவுடன் பறிகொடுத்தது.

வெளியேறியது ஆம் ஆத்மி, இனி தனித்தே போட்டி :

இந்தநிலையில், பாஜகவும், காங்கிரசும் மறைமுக உறவில் இருப்பதாக கூறி, ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து ஆம்ஆத்மி வெளியேறி இருக்கிறது. யது. இனிமேல் அனைத்து மாநிலங்களிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கோரி, ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதின. ஆனால் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வந்த ஆம் ஆத்மி கட்சி, இந்த கடிதத்தில் கையெழுத்திடவில்லை.

மக்களவை தேர்தலுக்கு மட்டுமே இந்தியா கூட்டணி :

இந்நிலையில் ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆம் ஆத்மி கட்சி, ‘இந்தியா’ கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டது. இனிமேல் எங்கள் கட்சி தனித்து செயல்பட முடிவு செய்துள்ளது. இந்த முடிவு கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. பாஜகவும், 2024 மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே, இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்டது’ என்று ஆம் ஆத்மி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேபோல் ஆம் ஆத்மி மூத்த தலைவர் அனுராக் தண்டா வெளியிட்டுள்ள பதிவில், ‘பாஜகவும் காங்கிரஸும் மறைமுகமாக இணைந்து செயல்படுகின்றன. பிரதமர் மோடிக்கு அரசியல் ரீதியாக பயனளிக்கும் விஷயங்களை மட்டுமே ராகுல் காந்தி பேசுகிறார். அதற்கு பதிலாக, சோனியா காந்தி குடும்பத்தை சிறையில் இருந்து மோடி காப்பாற்றுகிறார்.

ஆம் ஆத்மி தனித்தே போட்டி :

மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு 240 இடங்களைப் பெற உதவியதில் ஆம் ஆத்மி முக்கிய பங்கு வகித்தது. இனி வரும் அனைத்து மாநிலத் தேர்தல்களிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும். நாட்டின் நலனுக்கு ஏற்ப எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுகளை ஆதரிக்கும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in