நெருங்கும் சட்டமன்ற தேர்தல் 2026 : மூன்றாவது முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

Prime Minister Modi is coming to Tamil Nadu again on March 11th : திருச்சியில் வரும் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
Prime Minister Modi is coming to Tamil Nadu again on March 11th!
Prime Minister Modi is coming to Tamil Nadu again on March 11th! source:google
1 min read

Prime Minister Modi is coming to Tamil Nadu again on March 11th!

சட்டமன்ற தேர்தல் 2026 :

தமிழக சட்ட மன்ற தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட ஏப்ரல் 3 அல்லது 4 ஆவது வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தமிழக அரசியல் களம் இப்போதே சூடு பிடித்துள்ளது.

தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்தான முக்கிய முடிவுகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகின்றனர்.

பாஜக-அதிமுக , எழுச்சியான கூட்டணி

பாஜக, அதிமுக கூட்டணியை உறுதிபடுத்தும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக-பாஜக கூட்டணி எழுச்சியான, நம்பிக்கையான கூட்டணி என்று தெரிவித்திருந்தார்.

பாஜகவின் கூட்டணி கட்சிகள்

வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சியுடன், அதிமுக, அன்புமணி தலைமையிலான பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி,அமமுக, பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி முதலானவை கூட்டணியில் உள்ளன.

கூட்டணி கட்சிகளை ஆதரிக்கும் பிரதமர்

பிரதமர் மோடியும் கூட்டணி கட்சிகளை ஆதரிக்கும் வகையில் தமிழகத்திற்கு வருகை தர தொடங்கியுள்ளார். ஏற்கெனவே பிரதமர் மோடி மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும், அதைத்தொடர்ந்து மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்திலும் பேசி இருந்தார்.

மூன்றாவது முறையாக தமிழகம் வருகை

இதைத்தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார்.

மார்ச் 11-ல் திருச்சியில் பிரதமர்

கூட்டணிக் கட்சியை ஆதரிக்கும் வண்ணம் வரும் 11 ஆம் தேதி திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு பேசவுள்ளனர்.

பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள்

பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை

பாஜக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும் பாஜக உயர்மட்ட தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Thamizh Alai
www.thamizhalai.in