மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு : பாதுகாப்பு பணியில் 2.4 லட்​சம் வீரர்​கள்!

மேற்​கு​வங்க முதல் கட்ட சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான பிரச்​சா​ரம் ஓய்ந்த நிலையில் ,மாநிலத்​தின் 152 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு நாளை வாக்​குப்​ப​திவு நடை​பெற உள்​ளது.
Assembly elections; First phase of voting tomorrow for 152 constituencies in West Bengal
Assembly elections; First phase of voting tomorrow for 152 constituencies in West Bengalgoogle
1 min read

சட்டமன்ற தேர்தல்

5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 மாநிலங்களுக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில் ,முதற்கட்ட வாக்குப்பதிவானது நாளை நடைபெறுகிறது

152 தொகுதி: முதற்கட்ட வாக்குப்பதிவு '

மேற்கு வங்கத்தில் உள்ள 152 தொகுதிகளுக்கு , சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குபதிவானது நடைபெற இருக்கிறது

3.60 கோடி பேர் வாக்​குரிமை அளிக்க தகுதி பெற்றவர்

மேற்​கு​வங்​கத்​தில் மொத்​தம் 294 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் இருக்கும் நிலையில் , ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக தேர்​தல் நடத்​தப்பட உள்​ளது.

முதற்கட்டமாக 152 தொகு​தி​களுக்கு நாளை வாக்​குப்​ப​திவு நடத்​தப்பட உள்​ளது. மொத்​தம் 1,478 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 3.60 கோடி பேர் வாக்​குரிமை அளிக்க தகுதி பெற்றவர்களாக இருக்கின்றனர்.

பாதுகாப்பில் மத்திய பாதுகாப்பு படைகள்

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் உள்ள 152 தொகுதிகளில், பதற்றத்தை தணிக்க 2.4 லட்​சம் வீரர்​கள் அடங்கிய மத்திய பாதுகாப்பு படைகள் பாதுகாப்பில் தயார் நிலையில் இருக்கின்றனர் .

இதற்கு முன்னர் தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் தொண்​டர்​களுக்​கும் பாஜக தொண்​டர்​களுக்​கும் இடையே பல்​வேறு இடங்​களில் மோதல்​கள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள்

,மேற்கு வங்கத்தில் நடைபெறும் முதற் கட்ட வாக்குப்பதிவை அடுத்து அங்கு தேர்தல் ஆணையம் சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருசக்கர வாகனங்களில் ஒரு​வர் மட்​டுமே பயணம் மேற்​கொள்ள வேண்​டும்.

பின்​இருக்​கை​யில் யாரை​யும் ஏற்​றக்​கூ​டாது என்று தேர்​தல் ஆணை​யம் கண்​டிப்​புடன் உத்​தர​விட்​டுள்​ளது.

மேலும் மருத்​துவ தேவை, குடும்ப விழாக்​கள், பள்​ளி​களுக்கு மாணவ, மாண​வியரை அழைத்​துச் செல்​வது ஆகிய பணி​களுக்கு மட்​டும் விதி​விலக்கு அளிக்​கப்​பட்டு உள்​ளது.

இதே​போல வீட்டு உபயோக பொருட்​கள், உணவு வகைகளை விநி​யோகம் செய்​யும் ஊழியர்​களுக்​கும் வி​தி​விலக்​கு அளிக்​கப்​பட்​டு உள்ளது.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in