

சுபான்ஷூ சுக்லா பேச்சு
Shubhanshu Shukla on Bengaluru Traffic : சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த இந்திய விண்வெளி வீரர்கள் வரலாற்றில் சுபான்ஷூ சுக்லாவும் ஒருவராவார். விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு, 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் இவரே என்ற பெருமையை பெற்றுள்ளார். பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக, சுபான்ஷூ சுக்லா பங்கேற்றார்.
இவர் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்கு வரும்பொழுது, பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் சிரமம் அடைந்துள்ளார். இது குறித்து நகைச்சுவையாக மாநாட்டில், பேசிய சுபான்ஷூ சுக்லா நான் பெங்களூருவின் மறுபக்கமான மாரத்தஹள்ளியிலிருந்து வருகிறேன். இந்த மாநாட்டில் நான் உங்களுடன் செலவிடப் போகும் நேரத்தை விட மூன்று மடங்கு நேரத்தை நான் செலவிட்டேன். எனவே, எனக்கு இருக்கும் அர்ப்பணிப்பை நீங்கள் பார்க்க வேண்டும் என்றார்.
மீண்டும் நிகழாது பிரியங்க் கார்கே
இதைத்தொடர்ந்து பேசிய அவர், பெங்களூரு போக்குவரத்து நெரிசலில்(Shubhanshu Shukla on Bengaluru Traffic) பயணிப்பதை விட, விண்வெளியில் பயணம் செய்வது எளிது என்றும் மராத்தஹள்ளியில் இருந்து பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் உள்ள உச்சிமாநாடு நடைபெறும் இடத்திற்கு தனது பயணம் வழக்கமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எடுக்கும். தற்போது 34 கி.மீ பயணம் தனது திட்டமிடப்பட்ட உரையை விட மூன்று மடங்கு அதிக நேரம் எடுத்தது.
இவ்வாறு சுபான்ஷூ சுக்லா நகைச்சுவையாக பேசியுள்ளார்.சுபான்ஷூ சுக்லாவின் நகைச்சுவையான கருத்துக்கு கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே(Priyank Kharge Reply To Shubhanshu Shukla), ''இதுபோன்ற தாமதங்கள் மீண்டும் நிகழாமல் மாநில அரசு உறுதி செய்யும்'' என்று கூறினார்.