All Party Meeting : பட்ஜெட் கூட்டத் தொடர், சுமூகமாக நடத்த ஆலோசனை

Union Budget 2026 All Party Meeting in Delhi : டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தை சுமூகமாக நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
At the all-party meeting held in Delhi today, it was decided to conduct the budget session smoothly
At the all-party meeting held in Delhi today, it was decided to conduct the budget session smoothlySource : All Party Meeting
1 min read

பட்ஜெட் கூட்டத் தொடர்

Defence Minister Rajnath Singh to chair all-party meeting ahead of Union Budget 2026 session : பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.

இந்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார்.

ஞாயிறன்று மத்திய பட்ஜெட்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழக்கமாக கொண்டுள்ளது. இந்தாண்டு பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை.

அதனால் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அரிதாக அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குவதை ஒட்டி, இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து இருந்தது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் ( எம்பிக்கள் ) கலந்து கொண்டார்கள்.

சுமூகமாக நடத்த வேண்டுகோள்

பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அவை அலுவல்களை முறையாக நடத்த ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

ஜனாதிபதி உரை மீது விவாதம்

மத்திய பட்ஜெட் 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டதும், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் பிப்ரவரி 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெறும்.

இரண்டு அமர்வுகளாக பட்ஜெட் கூட்டம்

பிப்ரவரி 13ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு இருக்கும். அதன்பிறகு, மார்ச் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு இருக்கும்.

=================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in