”பேரணி, போலீஸ் தடியடி” : நீட் தேர்வு முறைக்கேடு, தீவிரமடைந்த CJP கட்சி போராட்டம் : டெல்லியில் இணைய சேவை முடக்கம்..!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கூறி சிஜேபி கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது
Attempt to march towards Parliament; scuffle between 'Cockroach janta Party' members and the police.
Attempt to march towards Parliament; scuffle between 'Cockroach janta Party' members and the police.google
2 min read

தீவிரமடைந்துள்ள சிஜேபி போரட்டம்

நீட் முறைக்கேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லியில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் போரட்டம் தீவிரமடைந்துள்ளது ,20 நாட்களுக்கு மேலாக டெல்லியில் உண்ணாவிரதத்தை தொடங்கி இன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்லமுடிவு செய்தனர் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர்

சிஜேபி பேரணி , டெல்லியில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறை

நீட் முறைக்கேடு தொடர்பாக , மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் கோரிக்கையிஅ வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற நிலையில் , டெல்லியில் ஜந்தர் மந்தரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், காவல் துறை குவிப்பு

ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு டெல்லியில் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே நாடாளுமன்றம் நோக்கி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இன்று பேரணி சென்றனர்.

கரப்பான் கட்சியினரின் பேரணி , மெட்ரோ நிலையங்கள் தற்காலிக மூடல்

டெல்லியில் , கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் , நீட் முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பத்வி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து , இன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில் , பேரணியாக சென்றனர்.

ஜன்பத், ராஜீவ் சௌவ், பட்டேல் சௌக் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

சிஜேபி கட்சி காவல்துறை இடையே மோதல்

இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கு பேரணி செல்ல முயன்றதால் கரப்பான் கட்சியினர்-காவல் துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. போலீஸ் வைத்திருந்த தடுப்புகளை மீறி பேரணியாக செல்ல கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் முயற்சி செய்தனர்.

இணையதள சேவை முடக்கம்

கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டம் காரணமாக டெல்லியில் இணையதள் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.

அமலுக்கு வந்த 163 தடைச்சட்டம் , பாதுகாப்பில் துணைராணுவ படையினர்

இந்த சூழலில் , அசம்பாவிதங்களைத் தவிர்க்க 163 தடைச் சட்டத்தை தில்லி முழுவதும் காவல்துறையினர் அமலுக்கு கொண்டுவந்தனர்.தற்போது நாடாளுமன்றம் நோக்கி பேரணியைத் தொடங்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள்,

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்களை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தியும் , கூட்டத்தை கலைக்க மாணவர்கள் மற்றும் போராட்டகாரர்கள் மீது தடியடி நடத்தினர் , இதனால் டெல்லி ஜந்தர் மந்தரில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது

காவல்துறை தடியடி , எதிர்கட்சிகள் எதிர்ப்பு

நீட் முறைக்கேடுவிற்கு எதிராக பேரணி மேற்கொண்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை காவல் துறையினர் தடியடி நடத்தினர். காவல் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in