

மோடியின் பாஜக ஆட்சி :
India set 5 Guinness World Records under National Health Mission : பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜக அரசு 2014 முதல் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக 140 கோடி இந்தியர்களை வழிநடத்தி செல்கிறார். அவரது தலைமையின் கீழ் பாஜக அரசு பல்வேறு துறைகளில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சுகாதார நலத்திட்டங்கள்
குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் காக்க மத்திய சுகாதார அமைச்சகத்தின் திட்டங்கள் மூலம் லட்சக் கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. ஆன்லைன் மூலம் பரிசோதனைக்காக நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் பதிவு செய்து சிகிச்சை பெறுகின்றனர்.
ஐந்து கின்னஸ் சாதனைகள்
அதன்படி ஒரு மாதத்தில் சுகாதாரத் தளத்தில் பதிவு செய்த அதிகபட்ச நபர்கள் (3.21 கோடி). ஒரு வாரத்தில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்கு ஆன்லைனில் பதிவு செய்த அதிகபட்ச நபர்கள் (9.94 லட்சம்) மற்றும் மாநில அளவில் ஒரு வாரத்தில் முக்கிய உடல் அடையாளங்கள் (Vital Signs) பரிசோதனைக்கு ஆன்லைனில் பதிவு செய்த அதிகபட்ச நபர்கள் (1.25 லட்சம்) ஆகிய பிரிவுகளில் கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
வளர்ச்சியில் பெண்களின் பங்கு
இந்த இயக்கத்திற்கான நாடு தழுவிய பிரச்சாரத்தை பிரதமர் மோடியும் மேற்கொண்டார் “தாய்மார்கள், சகோதரிகள் போன்ற பெண் சக்திகள் தான் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக உள்ளனர். ஒரு தாய் ஆரோக்கியமாக இருந்தால் முழு குடும்பமும் ஆரோக்கியமாக இருக்கும்” என்று அவர் எடுத்துரைத்தார்.
ஊட்டச்சத்து இயக்கம்
'போஷன் மாஹ்' (ஊட்டச்சத்து மாதம்) திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட இந்த இயக்கம், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நாடு முழுவதும் பெண்கள், இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
இந்த சுகாதார முயற்சியில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகள், 1.14 கோடி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், 94 லட்சம் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிற சமூக தளங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்றனர்.
கோடிக் கணக்கான பரிசோதனைகள்
1.78 கோடிக்கும் மேலான பிபி பரிசோதனைகள், 1.73 கோடி டயபெட்டிக் பரிசோதனைகள், 69.6 லட்சம் வாய்வழி புற்றுநோய் பரிசோதனைகள், 1.43 கோடி தடுப்பூசிகள் மற்றும் 1.51 கோடி ரத்த சோகை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2 கோடி பேருக்கு கவுன்சலிங்
மேலும் 85.9 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் காச நோய்க்கும், 10.2 லட்சத்திற்கும் அதிகமானோர் அரிவாள் செல் சோகைக்கும் (SCD) பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, 2.14 கோடி பேர் கவுன்சலிங் மற்றும் நல்வாழ்வு ஆலோசனைகளில் பங்கேற்றனர்.
ஐந்து கின்னஸ் சாதனைகள்
Five Guinness World Records:
1. The most pledges received for a health campaign in one week: with 6,004,912 pledges, surpassing the minimum requirement of 14,571, setting a new global benchmark as there was no previous record holder.
2. The most pledges received for a health campaign in one month: with 13,892,976 pledges, surpassing the previous record of 58,284 pledges held by Cigna & CMB Life Insurance Company Limited (China) in Shenzhen, Guangdong, China.
3. The most pledges received for a health campaign: overall with 13,892,976 pledges, surpassing the previous record of 569,057 pledges held by Zifi FDC Limited (India).
4. The largest online photo album of people displaying a digital certificate: with 62,525 photos, breaking the previous record of 29,068 photos held by Accenture Solutions Private Limited (India).
5. The largest online video album of people saying the same sentence: with 12,798 videos, surpassing the previous record of 8,992 videos held by Ghe Bharari, Rahul Kulkarni, and Neelam Edlabadkar (India).
======