உணவு பார்சல்களில் ஸ்டேப்ளர் பின் பயன்படுத்த தடை
உணவுப் பொருட்கள் மற்றும் உணவு பாக்கெட்டுகளில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின், வயர்களை பயன்படுத்தக்கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையமான Fssai உத்தரவிட்டுள்ளது.
செய்தித்தாள்களில் உணவு வழங்கவும் தடை
ஏற்கனவே உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம் ,செய்தித்தாளில் உள்ள அச்சுமையில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளதாக கூறி உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் பொட்டலம் கட்டக்கூடாது
என்று இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
ஆணையம் தெரிவித்துள்ளதாவது
உணவுப் பொருட்கள் மற்றும் அலங்கார கேக்குகளில் மறைந்திருக்கும் உலோக ஊசிகளை பொதுமக்கள் விழுங்கிவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனால் அதனை பயன்படுத்துவோரின் உடல்நிலையானது கடுமையாக பாதிகப்படுவதோடு குழந்தைகளுக்கும் கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது
FSSAI அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது
உணவு கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள், அலங்கரிக்கப்பட்ட கேக்குகள், கேக் பெட்டிகள், இனிப்பு பெட்டிகள், தின்பண்ட பொட்டலங்கள், உணவு பார்சல்கள், உணவுப் பாக்கெட்டுகளில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின், வயர்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்றும்
மீறுவோர் மீது கடுமையாக நடவடிக்கை : FSSAI
இந்த அறிவுறுத்தலை மீறுவோர் மீது உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எப்எஸ்எஸ்ஏஐ உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
================