”வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்” : கோரிகைகள் முன்வைத்து போராட்டம் : 4 நாட்கள் தொடர் விடுமுறை, பொதுமக்களுக்கு பாதிப்பு.!

பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Bank employees are on strike today, pressing for demands that include the old pension scheme
Bank employees are on strike today, pressing for demands that include the old pension schemesource:thamizhalai,ai generated
1 min read

Bank employees are on strike today, pressing for demands that include the old pension scheme

வங்கி ஊழியர்கள்

நாடு முழுவதும் செயல்படும் வங்கிகளில் லட்சக் கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். வங்கிகள் மூலமாக நாள்தோறும் லட்சக் கணக்கான மக்கள் சேவைகளை பெற்று வருகின்றனர்.

வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள்

வங்கி ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து அடிக்கடி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பழைய ஓய்வூதியம், வாரத்தில் 5 நாட்கள் வேலை அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

2 ஆண்டுகளாக கோரிக்கை நிறைவேறவில்லை

இதுதொடர்​பாகசெய்​தி​யாளர்​களிடம் அகில இந்​திய வங்கி ஊழியர்​கள் சங்க பொதுச் செய​லா​ள​ரும், வங்கி ஊழியர் சங்​கங்​களின் ஐக்​கிய மன்ற ஒருங்​கிணைப்​பாள​ரு​மான சி.எச்​.வெங்​க​டாச்​சலம், ”2024 மார்ச்​சில் கையெழுத்​தான இருதரப்பு ஒப்​பந்​தத்​தில், வாரத்​தின் அனைத்து சனிக்​கிழமை​களை​யும் விடு​முறை​யாக அறிவிக்க வங்கி நிர்​வாகங்​கள் சம்​ம​தித்​தன.

இதற்​காக, திங்​கள் முதல் வெள்ளி வரை தினசரி வேலை நேரத்தை வாடிக்​கை​யாளர் சேவைக்​காக 40 நிமிடங்​கள் அதி​கரிக்​க​வும் ஊழியர்​கள் ஒப்​புக்​கொண்​டனர். இந்த ஒப்​பந்​தம் மத்​திய நிதி அமைச்சக ஒப்​புதலுக்​காக அனுப்​பப்​பட்டு இரண்​டரை ஆண்​டு​கள் ஆகி​யும் நிலு​வை​யில் உள்​ளது.

வாரம் 5 நாட்கள் வேலை

எனவே, வாரம் 5 நாட்கள் வேலை​முறையை நடை​முறைப்​படுத்த வேண்​டும். ஒப்​புக்​கொண்​டபடி, அனைத்து சனிக்​கிழமை​யும் விடு​முறை அளிக்க வேண்​டும். இதுத​விர, புதி​தாக பணிக்​குச் சேர்ந்த ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும்.

பழைய ஓய்வூதிய திட்டம்

ஓய்​வு​பெற்ற மூத்த குடிமக்​களுக்​கான ஓய்​வூ​தி​யத் தொகையை தற்​போதைய நில​வரத்​துக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்​டும். ஓய்வு பெற்​றவர்​களுக்​கான மருத்​து​வக் காப்​பீட்டு பிரீமி​யம் தொகையை வங்​கி​களே முழு​மை​யாக ஏற்க வேண்​டும். பணிக்​கொடை உச்ச வரம்பை உயர்த்த வேண்​டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இக்​கோரிக்​கை​களை வலி​யுறுத்​தி, நாடு தழு​விய அளவில் வங்கி ஊழியர்​கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அகில இந்​திய வங்கி ஊழியர்​கள் சங்​கம் உட்பட 7 சங்​கங்​கள் பங்​கேற்​றுள்ளன.

8 லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்

தமி​ழ​கத்​தில் 60 ஆயிரம் பேர் உட்பட நாடு முழு​வதும் 8 லட்​சம் ஊழியர்​கள், அதி​காரி​கள் பங்​கேற்​று இருக்கிறார்கள்

நான்கு நாட்கள் தொடர் விடுமுறை

நாளை (12-ம் தேதி) சனி, 13-ம் தேதி ஞாயிறு, 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஆகிய 3 நாட்​களும் அரசு விடு​முறை என்​ப​தால் வங்​கி​கள் செயல்​ப​டாது. இதனால், வங்கி சேவை தொடர்ந்து 4 நாட்​கள் பாதிக்கப்பட்டுள்ளது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in