
Impact of GST Reforms on FMCG Sector Project Report : ஜிஎஸ்டி வரிசீரமைப்பு தொடர்பாக பல்வேறு ஆய்வறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. துறைவாரியாக நிகழவிருக்கும் மாற்றங்கள் குறித்து அந்த அறிக்கைகள் விரிவாக அலசுகின்றன. அந்த வரிசையில் பேங்க் ஆஃப் பரோடாவும்(Bank Of Baroda) அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, GST மறுசீரமைப்பு மூலம், செப்டம்பர் முதல் இந்தியாவில் நுகர்வு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் நிகர லாபத்தை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நுகர்வுக்கு நிகர ஆதாயம் 0.7-1 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் எனவும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.2-0.3 சதவீதமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட வரி மூலம் நுகர்வோர் சேமிக்கும் தொகை மேலும் அதிக தேவையாக மாறலாம் என்பதால், இந்த தாக்கம் இன்னும் உயரலாம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அன்றாட வீட்டு உபயோகப் பொருட்கள் (FMCG) பெரும்பாலும் 5 சதவீத GST வரம்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நடவடிக்கை பணவீக்கத்தைக் குறைக்கும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. பணவீக்க தாக்கம் 55-75 அடிப்படை புள்ளிகள் (bps) வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது-
வெண்ணெய் மற்றும் வனஸ்பதி போன்ற பொருட்களுக்கு குறைக்கப்பட்ட வரிவிகிதங்கள் காரணமாக பேக்கிங் உணவுகள், சிற்றுண்டிகள், எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள் போன்றவற்றின் விலைகள் வீழ்ச்சியடையும். இவை அன்றாட நுகர்வு பொருட்களாக இருப்பதால், விலை வீழ்ச்சி உண்மையான நுகர்வு தேவையை வலுவாக உயர்த்தும், இது புதிய முதலீடுகளை ஈர்க்க வாய்ப்பாக அமையும்.
மேலும் படிக்க : GST 2.O Reforms : 2 அடுக்குகளாக குறைப்பு: 22ம் தேதி முதல் அமல்
விலைகள் சராசரியாக 7.4 சதவீதம் குறையும், இது அடுத்த ஆறு மாதங்களில் மைய பணவீக்கத்தை 30-40 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கலாம்.
எனவே இந்த வரிசீரமைப்பு(GST Reforms in Tamil) பணவீக்க அழுத்தங்களை குறைப்பது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அதன் முதலீடுகளுக்கு கணிசமான அளவுக்கு நம்பிக்கை அளிக்கும் என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது