
ஜிஎஸ்டி வரி விதிப்பு :
GST Collection July Month 2025 India Update : மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்பட்ட தான் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை. 2017ம் ஆண்டு இது அறிமுகப்படுத்தப்பட்டது. சரக்கு மற்றும் சேவைகளுக்கான வரியானது நுகர்வோர் மீது விதிக்கப்படும் ஒரு இலக்கின் அடிப்படையிலான வரியாகும். ஒற்றைசாளர முறையில் வரி வசூல் செய்யப்படுவதால், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைத்து வருகிறது.
ஜூலையில் அதிக ஜிஎஸ்டி வசூல் :
கடந்த ஜூலை மாதத்துக்கான நாட்டின் ஜிஎஸ்டி வசூல் 1.96 லட்சம் கோடி ரூபாய் ஆக அதிகரித்து(GST Collection July 2025) உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் வசூலான 1.73 லட்சம் கோடியை விட 7.5 சதவீதம் அதிகம் ஆகும். அதன்படி, ஜிஎஸ்டி மூலம் ரூ.1,95,735 கோடி வசூல் ஆகி உள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக 7 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூலை மாத்தை விட இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ஜிஎஸ்டி வருமானம் 10.7 சதவீதம்(GST Income) அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க : GST Tax 2025 : ஜிஎஸ்டி வசூல் உச்சம் : ஜூன் மாதம் 1.84 லட்சம் கோடி
மூன்று மாதங்களில் ரூ8,18,009 கோடி :
இந்தாண்டு 3 மாதத்தில் மட்டும் ரூ.8,18,009 கோடி கிடைத்துள்ளது. 2025ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல்(GST Collection) 6.20 சதவீதம் உயர்ந்து, 1.84 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி வரலாற்றில், கடந்த ஏப்ரல் அதிகபட்சமாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலாகி சாதனை படைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
====