
ஆபரேஷன் சிந்தூர் :
Parliament Session on Operation Sindoor : காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்(Pahalgam Attack). இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இந்திய போர் விமானங்களும், ட்ரோன்களும் தாக்குதலில் ஈடுபட்டு இலக்குகளை தகர்த்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் சண்டை வேண்டாம் என்று சமாதானத்திற்கு வந்தது.
பாகிஸ்தான் விவகாரம், எதிர்க்கட்சிகள் அரசியல் :
வழக்கம் போல இந்தியாவின் தாக்குதல் விமர்சித்த எதிர்க்கட்சிகள், ஆபரேஷன் சிந்தூரை குறை கூறின. மத்திய அரசு மீது குற்றச்சாட்டை முன்வைத்து அரசியல் செய்யப்பட்டது. இதே பிரச்சினையை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
நாடாளுமன்ற செயல்பாடுகள் பாதிப்பு :
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடர்ந்து 3வது நாளக எந்த அலுவலும் நடைபெறவில்லை. எனவே, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி முழு விளக்கம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
29ம் தேதி நாடாளுமன்றத்தில் விவாதம் :
இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் வரும் 29ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் குறித்து இருஅவைகளிலும் விவாதம் நடைபெறுகிறது(Operation Sindoor Debate). மக்களவையில் 16 மணிநேரமும், மாநிலங்களவையில் 9 மணிநேரமும் விவாதத்துக்காக ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அலுவல் ஆலோசனைக் குழு (பிஏசி) கூட்டத்திற்குப் பிறகு இது குறித்த முடிவு இறுதி செய்யப்பட்டது.
பிரதமர் மோடி பதிலளிக்கிறார் :
இந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி(PM Modi in Parliament), உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பதிலளிப்பார்கள். இவர்கள் அளிக்கும் விளக்கங்கள் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்திரை கிழிக்கப்படும் எனத் தெரிகிறது.
====