

ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் அறிமுகம்
Trustwell Hospitals Launches Karnataka’s First 5G-Enabled Smart Ambulance : கர்நாடகா முதல் 5G ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் பெங்களூரு, ஜே.சி. ரோட்டில் செயல்பட்டு வரும் டிரஸ்ட்வேல் மருத்துவமனை சார்பில், கர்நாடக மாநிலத்தின் முதல் 5G தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ‘ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்’ சேவை (பிப்ரவரி 11, 2026) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுகிறது. “Your Trust. Our Care” என்ற தத்துவத்தை முன்வைத்து செயல்படும் டிரஸ்ட்வேல் மருத்துவமனை, அவசர மருத்துவ சேவைகளில் புதிய மைல்கல்லாக இந்த முயற்சியை எடுத்துள்ளது.
5G ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் சேவை
கர்நாடக மாநில காவல் துறை தலைமை இயக்குநரும், காவல் படை தலைவருமான டாக்டர் எம்.ஏ. சலீம் ஐபிஎஸ், முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு 5G ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.5G தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் ஆம்புலன்ஸ், அவசர காலங்களில் நோயாளிகளுக்கு உடனடி மற்றும் மேம்பட்ட மருத்துவ உதவியை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வேகமான இணைய வசதி
ஆம்புலன்ஸ் பயணத்தின் போது நோயாளியின் உடல் நிலை தொடர்பான முக்கிய தகவல்கள், நேரடியாக மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு உயர் வேக இணைய வசதி மூலம் அனுப்பப்படும். இதன் மூலம், நோயாளி மருத்துவமனைக்கு வந்து சேரும் முன்பே தேவையான சிகிச்சை திட்டமிட்டபடி முடியும்.இந்த ஸ்மார்ட் ஆம்புலன்ஸில் உயர் தர மானிட்டர்கள், உயிர் ஆதரவு கருவிகள், டெலிமெடிசின் வசதி, நேரடி வீடியோ மற்றும் தரவு பரிமாற்றம் போன்ற நவீன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பம் உயிர்களை காக்கும் திறன்
விபத்து, மாரடைப்பு, ஸ்ட்ரோக், கர்ப்பிணி பெண்களின் அவசர நிலை போன்ற முக்கிய தருணங்களில் இந்த தொழில்நுட்பம் உயிர்களை காக்கும் திறன் கொண்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.டிரஸ்ட்வேல் மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், “மக்களின் நம்பிக்கையே எங்கள் மூலதனம். அவசர மருத்துவ சேவைகளை மேலும் விரைவாகவும் துல்லியமாகவும் வழங்கும் நோக்கில், கர்நாடகாவில் முதல் முறையாக 5G ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
கர்நாடக சுகாதார துறைக்கும் ஒரு முன்னோடி முயற்சி
இது மாநில சுகாதார துறைக்கும் ஒரு முன்னோடி முயற்சியாக இருக்கும்” என்று தெரிவித்தனர்.தொழில்நுட்பமும் மனிதாபிமானமும் இணையும் இந்த முயற்சி, எதிர்காலத்தில் அவசர மருத்துவ சேவைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.கர்நாடகாவில் மருத்துவ சேவைகள் புதிய உயரத்திற்கு செல்லும் இந்த தருணம், டிரஸ்ட்வேல் மருத்துவமனையின் சமூகப் பொறுப்பையும், நவீன சுகாதார அணுகுமுறையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது இந்த முயற்சிக்கு கர்நாடக பொதுமக்கள் மகிழ்ச்சியை தெரிவித்து, பாராட்டி வருகின்றனர்.