

பிப்.1ல் மத்திய பட்ஜெட்
PM Kisan Samman Nidhi, Union Budget 2026 - 2027 Expectations in Tamil : 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை மறுநாள் (பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படுகிறது.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
இந்த பட்ஜெட் மீதும் பல்வேறு துறையினர் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஏழை எளிய மக்களும் விவசாயிகளும் மத்திய பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். விவசாயிகளின் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. அதற்குக் காரணம் பிஎம் கிசான் திட்டம்..
ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி
நலிந்த விவசாயிகளுக்கு அரசு தரப்பில் ஆதரவு தரவேண்டும் என்பதற்காக 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் விவசாயிகள் தங்களுடைய வேளாண்மைக்கு உரம் வாங்க, விவசாயம் செய்ய, கால்நடைகள் பராமரிப்பு போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு 6000 ரூபாய் என்ற அளவில் மூன்று தவணையாக வழங்கப்படுகிறது.
22வது தவணை?
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 21 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. 22வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். பிப்ரவரி மாத மத்தியில் அல்லது இறுதியில் இந்தப் பணம் கிடைக்கும்.
2026 - மத்திய பட்ஜெட்
2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையில் தாக்கலாகிறது. இந்த பட்ஜெட்டில் பிஎம் கிசான் திட்டம் குறித்த முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9000 ரூபாயாக உயர்த்தப்படுமா?
பிஎம் கிசான் திட்ட உதவித் தொகையை 10,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 10,000 ரூபாய் இல்லாவிட்டாலும் 8,000 ரூபாயாவது வழங்க வேண்டும் என்று கேட்கின்றனர்.
காத்திருக்கும் விவசாயிகள்
தற்போது வழங்கப்படும் 6000 ரூபாய் என்பது தங்களுடைய விவசாயத் தொழிலை தொடர்ந்து நடத்தப் போதுமானதாக இல்லை என்கின்றனர்.
எனவே பிஎம் கிசான் தொகையை பட்ஜெட்டில் உயர்த்த வேண்டும் என்று கேட்கின்றனர். பிஎம் கிசான் நிதியுதவியை மத்திய அரசு 9000 ரூபாயாக உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
கடந்த பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு இருந்த போது, நிதியுதவி அதிகரிக்கப்படவில்லை. எனவே, இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு இருக்கும் என்கிறது டெல்லி அரசியல் வட்டாரம்.
====