இந்தியா மீதான வரி நீக்க உத்தரவு, டிரம்ப் கையெழுத்து:மோடி வரவேற்பு

Donald Trump 25 percent punitive tariff imposed on India was Cancelled : இந்தியா மீது விதிக்கப்பட்ட 25% அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
Big News US President Donald Trump signed an order to repeal the 25% punitive tariff imposed on India
Big News US President Donald Trump signed an order to repeal the 25% punitive tariff imposed on India Source : Google
2 min read

இந்தியா மீது 50% வரி

Donald Trump 25 percent punitive tariff imposed on India was Cancelled : ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கி வருவதைக் கண்டித்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முதலில் 25 சதவிகித வரியையும் பின்னர் கூடுதலாக 25 சதவிகித அபராத வரியையும் விதித்திருந்தார்.

இதனால் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதம் உயர்த்தப்பட்டது.

நல்லுறவில் பாதிப்பு

டிரம்பின் இந்த நடவடிக்கை, இந்திய-அமெரிக்க நல்லுறவை வெகுவாக பாதித்தது. சர்வதேச மாநாடுகளில் அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் சந்திப்பதை தவிர்த்தனர்.

ஒரு கலந்து கொண்டால், மற்றொருவர் வேறு காரணம் காட்டி அதை புறக்கணிப்பது தொடர்ந்தது.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

இந்த பிரச்னைக்கு முடிவுக்கு கொண்டு வரும் இந்தியா - அமெரிக்கா வர்த்தக விவகாரம், வரி உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

இதன் ஒரு கட்டமாக அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் தொலைபேசி வாயிலாக பேசி, பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

வர்த்தக ஒப்பந்தம் - வரிக் குறைப்பு

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கைவிட்டு, அமெரிக்காவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்க இருப்பதாகவும்,

இதன் காரணமாக 50% வரி 18% ஆக குறைப்பட்டு இருப்பதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

கூட்டறிக்கை வெளியீடு

இந்தநிலையில் இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியானது. இடைக்கால ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையை அமெரிக்கா சார்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டது.

\இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

30 டிரில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி

“இந்தியாவில் இருந்து 30 டிரில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதிக்கு வழிவகுக்கும். மேலும், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 18 சதவீத இறக்குமதி வரி விதிக்கும்.

இறக்குமதி வரி குறைக்கப்படும்

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் தானியக் கழிவுகள், கால்நடை தீவனங்களுக்கு வரிகுறைப்பு. அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் விவசாயப் பொருட்களுக்கான வரியும் குறைக்கப்படும்.

500 பில்லியன் டாலருக்கு இறக்குமதி

அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 500 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவிலிருந்து எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருள்களை இறக்குமதி செய்யவும் இந்தியா ஒப்புதல் அளித்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் டிரம்ப் கையெழுத்து

இந்தியா மீது விதிக்கப்பட்டு வந்த வரியை 50%ல் இருந்து 18%ஆக குறைக்கும் உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்து இட்டிருக்கிறார். இது உடனடியாக அமலுக்கு வருகிறது. அதன்படி, 25 அபராத வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

பிரதமர் மோடி வரவேற்பு

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கூட்டறிக்கை வெளியாகி இருப்பது மகத்தான செய்தி என்று, பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இருநாடுகளின் வலுவான நல்லுறவுக்கு இது மேலும் வலுச்சேர்க்கும்

அதிபர் டிரம்பிற்கு நன்றி

வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக முன்னிலை வகித்த, அதிபர் டொனால்டு டிரம்பிற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இந்திய விவசாயிகள், தொழில் முனைவோர், சிறுகுறு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நல்ல வாய்ப்புகள் உருவாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார்.

===================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in