மைதிலி தாக்கூரின் வெற்றி- பிரபல பாடகியாக இருந்து MLA-வாக வளர்ச்சி!

Maithili Thakur Wins Bihar Election 2025 Result : 11,730 வாக்குகள் மூலம் முன்னிலை வகித்து பிஹார் தேர்தலில் அசைக்க முடியாத வெற்றிபெற்றுள்ளார் பிரபல போஜ்புரி நாட்டுப்புற பாடகர் மைதிலி தாக்கூர்.
Bihar Election 2025 Bhojpuri Gana Singer To Bihar Alinagar MLA Maithili Thakur Full Political Journey Biography in Tamil
Bihar Election 2025 Bhojpuri Gana Singer To Bihar Alinagar MLA Maithili Thakur Full Political Journey Biography in TamilGOOGLE
1 min read

தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி

Maithili Thakur Wins Bihar Election 2025 Result : பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளில் பாஜக-ஜேடியுவின் என்டிஏ கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளுக்கு அதிகமாக 203 இடங்களை பிடித்து மாபெரும் இமாலய வெற்றி பெற்றது.

ஆனால், காங்கிரஸ் - ஆர்ஜேடியின் மகாகத்பந்தன் கூட்டணி சொ்ற்ப இடங்களில் வென்றுள்ளது. இதைத்தொடர்ந்து ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கிறது.

மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார்

பாஜக-ஜேடியுவின் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில், இதற்கு முன்னர் என்டிஏ ஆட்சி அமைத்தால், நிதிஷ்குமாரை முதல்வராக நியமிக்கமாட்டார் என மற்ற அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வந்தது. ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மீண்டும் என்டிஏ கூட்டணி 20 ஆண்டுகளுக்க பிறகும், நிதிஷ்குமார் முதல்வராக தொடர்வார் எனத் தெரிகிறது.

துணை முதல்வராகும் சிராக்

துணை முதல்வராக சிராஜ் பஸ்வான் மற்றும் சிலர் அமர்வதற்கு வாய்ப்பிருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், என்டிஏ கூட்டணி சார்பாக புதிதாக களமிறங்கியவர்களும் தங்களது தொகுதியில் வெற்றி கண்டு, 2020 ஆம் ஆண்டில் பிஹார் சட்டமன்ற தேர்தலை விட தற்போது பெரும்பான்மை தொகுதிகளை வென்று, அசைக்க முடியாத வெற்றிகளை பதிவு செய்துள்ளனர்.

அலிநகரில் பிரபல பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி

அதன்படி என்டிஏ கூட்டணியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல போஜ்புரி நாட்டுப்புற பாடகர் மைதிலி தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 25 வயதே ஆன இவர் பீகாரின் இளம் எம்எல்ஏவாக உருவெடுத்துள்ளார் என்பது மகத்தான வெற்றியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரே மாதத்தில் எம்எல்ஏவாக உருவெடுத்த மைதிலி தாக்கூர்

கடந்த மாதம் பாஜகவில் இணைந்த அடுத்த நாளே இவருக்கு வேட்பாளர் சீட் வழங்கப்பட்ட நிலையில் அரசியலில் பிரவேசித்த ஒரே மாதத்தில் எம்எல்ஏவாகவும் வெற்றி பெற்று கவனம் பெற்று வருகிறார்.

84,915 வாக்குகள் பெற்ற இவர் எதிர்த்து போட்டியிட்ட மகாகத்பந்தன் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வினோத் மிஸ்ராவை 11,730 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

மைதிலி தாக்கூர், சிறுவர்களுக்கான பாட்டும் பாடும் ரியாலிட்டி ஷோ மூலம் சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி ஊடக வெளிச்சத்திலேயே இருந்து வந்த நிலையில், தற்பொழுது அரசியல் வெளிச்சமும் அவர் மீது பட்டு எம்ஏவாக மிளர்கிறார்.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in