
பிகார் சட்டமன்ற தேர்தல் 2025 :
Bihar NDA Alliance Seat Sharing on Bihar Elections 2025 : பிகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
பிகாரில் மும்முனை போட்டி
சட்டமன்ற தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி, பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுவாஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. எனவே மும்முனை போட்டி உறுதியாகி இருக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக நடைபெற்ற வந்த பேச்சுவார்த்தைகளில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டு இருக்கிறது.
ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 தொகுதிகள்
அதன்படி, நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 101 தொகுதிகள், பாஜகவுக்கு 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.
லோக் ஜனசக்தி 29 தொகுதிகள்
சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி 29 தொகுதிகளில் போட்டியிட ஒப்புக் கொண்டுள்ளது. ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சி, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை.
பிரசாந்த் கி்ஷோர் தலைமையிலான ஜன் சுவராஜ் கட்சி தனித்து போட்டியிடுகி்றது. இந்தக் கட்சிக்கு 8 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிகிறது. ஒரு தொகுதியில் கூட வெற்ற பெற வாய்ப்பில்லை என்று கூறப்பட்டாலும், அவரது வருகை யாருக்கு பாதிப்பு என்பது தேர்தல் முடிவுகளில் தெரிய வரும்.
மேலும் படிக்க : Bihar Poll: மீண்டும் NDA ஆட்சிதான் : INDIA கூட்டணிக்கு பின்னடைவு?
இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் படி, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது.
===