குஜராத் உள்ளாட்சி தேர்தல் : பாஜக அமோக வெற்றி, 15 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது! : காங்கிரஸ், ஆம் ஆத்மி படுதோல்வி...

குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று சாதித்து இருக்கிறது.
BJP achieved a resounding victory in local body elections held in Gujarat
BJP achieved a resounding victory in local body elections held in Gujaratgoogle
1 min read

குஜராத் உள்ளாட்சி தேர்தல்

குஜராத் மாநிலத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 84 நகராட்சிகள், 34 மாவட்ட பஞ்சாயத்துகள், 260 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு கடந்த 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

மூன்று முனைப்போட்டி

பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவியது. யார் அதிக இடங்களை கைப்பற்றுவது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது.

மாநகராட்சிகளை கைப்பற்றிய பாஜக

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மாநிலத்தில் உள்ள 15 மாநகராட்சிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

கடைநிலை ஊழியர் to கவுன்சிலர்

இதில் மேசனா மாநகராட்சியில் வார்டு எண் 13-ல் போட்டியிட்ட பாஜகவின் ரமேஷ்பாய் பெற்ற வெற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாஜக அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக, தேநீர் வழங்​கு​வது மற்​றும் கோப்​பு​களைப் பராமரிப்​பது போன்ற பணிகளில் இருந்​த அவர் இன்று கவுன்சிலராகி இருக்கிறார்.

ரமேஷ்பாய் மகிழ்ச்சி

வட குஜ​ராத்​தில் அடிமட்ட அரசி​யல் முன்னேற்​றத்​தின் அடை​யாள​மாக இது பார்க்கப்படுகிறது. தனது வெற்றி பற்றி பேசும் ரமேஷ்​பாய், "நாங்​கள் மிக​வும் மகிழ்ச்சியாக இருக்​கிறோம். பிரதமர் நரேந்​திர மோடி தலைமையின் கீழ், வளர்ச்​சியை நோக்​க​மாகக் கொண்டு பணியாற்​று​வேன். நான் 28 ஆண்​டு​களுக்​கும் மேலாக உதவியாளராகப் பணி​யாற்​றினேன்" என்​றார்.

மோர்பி மாநகராட்சி - பாஜக 100% வெற்றி

இந்​தத் தேர்​தலில், மோர்​பி மாநகராட்சியில் மொத்​தம் உள்ள 52 இடங்​களி​லும் பாஜக வெற்றி பெற்​றுள்​ளது. காங்​கிரஸ், ஆம் ஆத்​மிக்கு ஓர் இடம் கூட கிடைக்​க​வில்​லை. இதன்​மூலம்​ எதிர்க்கட்சிகளே இல்​லாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.

காங்கிரஸ், ஆம் ஆத்மி படுதோல்வி

எதிர்பார்த்தபடியே பாஜக தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. போட்டியாக நின்ற காங்கிரஸ் கட்சியின் நிலை கவலைக்கிடம் என்றால், கடந்த முறை அதிரடி காட்டிய ஆம் ஆத்மி கட்சியும் இந்த முறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

பாஜகவிற்கு கிடைத்து இருக்கும் இந்த வெற்றி 2027 சட்டமன்றத் தேர்தலில்எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

========

logo
Thamizh Alai
www.thamizhalai.in