

மும்பை மாநகராட்சி
BJP-led Mahayuti’s sweeping victory in Brihanmumbai Municipal Corporation : இந்தியாவில் மிகவும் பணக்கார மாநகராட்சியாக கருதப்படுவது மும்பை.இங்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மும்பை மட்டுமின்றி, புனே, தானே உட்பட பல்வேறு மாநகராட்சிகளில் தேர்தல் நடைபெறத்து, வாக்குகள் எண்ணப்பட்டன.
மகாராஷ்டிராவில் பாஜக எழுச்சி
மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில், பாஜக பெரியளவில் வெற்றி பெற்றிருந்தது.எனவே, மாநகராட்சி தேர்தல்களிலும் போட்டி கடுமையாக இருந்தது. மும்பையில் பாஜக- ஷிண்டே சிவசேனா கூட்டணி, உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே சகோதரர்கள் கூட்டணி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவியது.
பாஜகவை கணித்த சர்வேக்கள்
ஆக்சிஸ் மை இந்தியா உட்படப் பல சர்வேக்கள், 227 இடங்களைக் கொண்ட மும்பை மாநகராட்சியில் பாஜக கூட்டணி வெல்லும் என்றே கூறியிருந்தன. அதன்படியே மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக பெரிய வெற்றியை ஈட்டி இருக்கிறது.
மும்பையை பிடித்த பாஜக கூட்டணி
மும்பை மாநகராட்சியை பாஜக - சிவ சேனா கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. மொத்தமுள்ள 227 வார்டுகளில், பாஜக 89 வார்டுகளிலும், சிவ சேனா 29 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் இக்கூட்டணி 118 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மை பெற 114 இடங்கள் தேவை என்ற நிலையில், இந்தக் கூட்டணி 118 இடங்களை வசப்படுத்தி உள்ளது. எனவே, மேயரை தேர்வு செய்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்க போவதில்லை.
அரியணையை பறிகொடுத்த சிவசேனா
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கூட்டணி 65 இடங்களில் வென்று இருக்கிறது. 26 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த சிவ சேனாவின் கட்டுப்பாட்டில் மும்பை மாநகராட்சி இருந்து வந்தது.
ஏக்நாத் ஷிண்டேவால் ஏற்பட்ட பிளவை அடுத்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
காங்கிரஸ் படுதோல்வி
தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 24 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்து இருக்கின்றன.
நவி மும்பை பாஜக கூட்டணி வசமானது
நவி மும்பையிலும் முடிவுகள் முழுமையாக வெளியாகி உள்ளன. இந்த மாநகராட்சியில் மொத்தமுள்ள 111 வார்டுகளில், பாஜக 66 வார்டுகளிலும், சிவ சேனா 42 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதன்மூலம், இக்கூட்டணி 108 வார்டுகளில் வெற்றி பெற்று ஏறக்குறைய மொத்தமாக மாநகராட்சியை தங்கள் வசப்படுத்தி உள்ளன.
காங்கிரஸ் படுதோல்வி
உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா 2 வார்டுகளிலும், எம்என்எஸ் ஒரு வார்டிடும் வெற்றி பெற்றள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. நாசிக் மாநகராட்சியிலும் பாஜக - சிவ சேனா கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.
1,372 இடங்களை கைப்பற்றிய பாஜக
29 நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 1,372 இடங்களையும் சிவசேனா 394 இடங்களையும், காங்கிரஸ் 315 இடங்களையும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 149 இடங்களையும் கைப்பற்றி இருக்கின்றன.
---------------