Kerala : பெண்களுக்கு ரூ.2,500 கூப்பன் : மூத்த குடிமக்களுக்கு ரூ.3,000, 2 சிலிண்டர் இலவசம் : பாஜக தேர்தல் வாக்குறுதி!

கேரளாவில் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் கூப்பன் வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
BJP election manifesto has promised that women in Kerala will be given a monthly coupon of Rs 2,500.
BJP election manifesto has promised that women in Kerala will be given a monthly coupon of Rs 2,500.google
1 min read

கேரள சட்டமன்ற தேர்தல்

அண்டை மாநிலமாக கேரளாவில் 140 தொகுதிகளிலும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, பாஜக என அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

ஆட்சியை பிடிக்க முனைப்பு

பினராயி தலைமையிலான மார்க்சிஸ்ட் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற தீவிர முனைப்பில் உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை சுவைத்த பாஜகவும், இந்த முறை கணிசமாக இடங்களை கைப்பற்றுவதில் உறுதியாக இருக்கிறது.

பாஜக தேர்தல் அறிக்கை

இந்தநிலையில், பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் வெளியிடப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்று இருக்கின்றன.

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்

* அதன்படி, கேரளா​வில் மளி​கைப் பொருட்​கள், மருந்​துகள் வாங்க பெண்​களுக்கு மாதம் ரூ.2,500 கூப்​பன் வழங்​கப்​படும்.

* இதற்காக மகளிருக்கு பக் ஷய ஆரோக்​கிய சுரக் ஷா’ அட்டை வழங்​கப்​படும்.

* ஏழைக் குடும்​பங்​களின் பெண் தலைவி​கள், கணவரை இழந்​தவர்​கள் மற்​றும் 70 வயதுக்கு மேற்​பட்ட மூத்த குடிமக்​களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்​வூ​தியம்

* ஆண்​டு​தோறும் ஓணம் மற்​றும் கிறிஸ்​து​மஸ் பண்​டிகை​யின் போது 2 இலவச எல்​பிஜி சிலிண்​டர் வழங்​கப்​படும்.

* ஒவ்​வொரு வீட்​டுக்​கும் மாதந்​தோறும் 20,000 லிட்​டர் இலவச தண்​ணீர் வழங்​கப்​படும்.

* வேளாண் துறை​யில், ஆதரவு தேவைப்​படும் அனைத்து பயிர்​களுக்​கும் குறைந்​த​பட்ச ஆதரவு விலை நிர்​ண​யிக்​கப்​படும்.

*நிலம் மற்​றும் வனத்​துறை சட்​டங்​களில் திருத்​தங்​கள் செய்​வதன் மூலம் தோட்ட நிலங்​களில் பல்​வேறு பயிர் சாகுபடி அனு​ம​தி

* கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படும்.

* கேரள மக்களுக்கு உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் ரூ.1 லட்சம் என்ற அடிப்படையில் நிறுவனங்களுக்கு சலுகைக் கடன்

* விழிஞ்சம் துறைமுகத்தைச் சுற்றிலும் பெரிய தொழில் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.

* சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாரம்பரியம் காக்க தனி சட்டம் உருவாக்கப்படும்

* திருவனந்தபுரம் – கன்னூர் பகுதிகளை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் சேவை உருவாக்கப்படும்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in