திமுகவின் ’சமூக அநீதி கொள்கை' : அண்ணாமலை கடும் விமர்சனம்

Annamalai on DMK Councillor Ramya Social Justice : திண்டிவனம் நகராட்சியில் திமுக கவுன்சிலர் காலில் அரசு ஊழியர் ஒருவர் விழ வைக்கப்பட்டது, திமுகவின் சமூக நீதியா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.
Annamalai on DMK Councillor Ramya Social Justice in Tindivanam
Annamalai on DMK Councillor Ramya Social Justice in Tindivanam
1 min read

அரசு ஊழியருக்கு அநீதி :

Annamalai on DMK Councillor Ramya Social Justice : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவருக்கும், 20-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ரம்யா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நகராட்சி அலுவலகத்தில் ரம்யாவின் காலில் அந்த ஊழியர் விழ வைக்கப்பட்டதாக, சிசிடிவி காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கவுன்சிலர் காலில் விழவைத்த கொடுமை :

அந்த காட்சிகளில் கவுன்சிலர் ரம்யா உள்ளிட்ட 8 பேர் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அரசு ஊழியர் ஓரு ஓரமாக நின்று கொண்டு இருந்தார். அப்போது, சேரை நகர்த்திவிட்டு ஊழியர் ரம்யா காலில் விழுவது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.

திமுகவின் சமூக நீதி எங்கே? :

இதுபற்றி கேள்வி எழுப்பி இருக்கும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “ இது தான் திமுகவின் சமூக நீதி கொள்கை என சாடியுள்ளார். திண்டிவனத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அரசு ஊழியரை, திமுக கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு, கவுன்சிலர் ரம்யாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

திமுகவின் சமூக அநீதி கொள்கை :

அரசு ஊழியர்களை திமுக அவமானப்படுத்துவது இது முதல்முறை அல்ல. இது ஒரு தனி சம்பவமும் அல்ல. இதற்கு முன்பு திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன், அரசு ஊழியரை ஜாதி அவதூறுகளால் திட்டியிருந்தார். சமூக நீதி என திமுக சொன்னாலும், உண்மையில் சமூக அநீதியை தவிர வேறு இல்லை” இவ்வாறு அண்ணாமலை காட்டமாக விமர்சித்து இருக்கிறார்.

===================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in