

இடதுசாரிகளை தகர்த்த திரிணாமூல்
மேற்கு வங்கத்தில் 2011ல் திரிணாமூல் முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது. இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக திகழ்ந்த பகுதிகளைத் தகர்த்து, மம்தா பானர்ஜி வரலாற்றுச் சாதனை படைத்தார்.
தொடர்ச்சியாக மூன்று தேர்தல்கள், 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த செல்வாக்கு மிக்க தலைவரான மம்தா, இந்த தேர்தலில் பாஜக அலையில் அடித்து செல்லப்பட்டார்.
மம்தா ஆட்சி மீது அதிருப்தி
15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த டிஎம்சிக்கு எதிராக, ‘ஆட்சியாளர் மீதான அதிருப்தி அலை' உருவானது.
2016ல் 10% இன்று 45.46%
மேற்கு வங்கத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் பாஜக ஒரு சிறிய கட்சியாக இருந்தது. 2016 சட்டப்பேரவை தேர்தலில் 10% வாக்குகளை மட்டுமே பெற்றது.
பாஜகவின் செல்வாக்கு அதிகரிப்பு
ஆனால், 2021 தேர்தலில் பாஜகவின் வாக்கு 38% ஆக உயர்ந்தது. இதில் 77 தொகுதிகளைப் பெற்ற பாஜகவுக்கு 2024 மக்களவைத் தேர்தலில் வாக்கு விகிதம் 39% ஆக கூடியது. தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த கட்சி 45.46 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது
ஊழலில் மம்தா அரசு
சில ஆண்டுகளாக, டிஎம்சி அரசு பல முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகளையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டது. இதில், பள்ளி ஆசிரியர் நியமன முறைகேடு மற்றும் பொது விநியோகத் திட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் முக்கியமானவை.
எடுபட்ட பாஜக பிரசாரம்
ஊடுருவல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக பாஜக அளித்த உறுதிமொழிக்கு பலன் கிடைத்துள்ளது. இந்து வாக்காளர்களை ஒன்று திரட்டுவதில் வட மாநிலங்களைப் போல் மேற்கு வங்கத்திலும் பாஜக தீவிரம் காட்டியது.
இந்து வாக்காளர்களுக்கு எதிராக டிஎம்சி அரசு பாகுபாடு காட்டுவதாக வெளிப்படையாகக் கூறியதும் வாக்குகளாக மாறியுள்ளது.
பாஜகவின் இலவச வாக்குறுதிகள்
பெண் வாக்காளர்களைக் குறிவைத்து, மாதம் ரூ.3,000 நிதியுதவி, பேருந்துகளில் இலவசப் பயணம், கர்ப்பிணிகளுக்கு ரூ.21,000, 124 யூனிட் இலவச மின்சாரம் போன்ற வாக்குறுதிகளும் பாஜக ஆட்சி அமையக் காரணமாகி விட்டன.
207 தொகுதிகளில் பாஜக வெற்றி
மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், 207 தொகுதிகளை பாஜக கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. திரிணமூல் காங்கிரசுக்கு 80 தொகுதிகள் கிடைத்தன.
ஒற்றை இலக்கத்தில் காங்கிரஸ்
காங்கிரஸ் 2, மார்க்சிஸ்ட் 1, ஏஐஎஸ்எப் 1 தொகுதிகளில் வெற்றி பெற்றன. திரிணமூல் காங்கிரஸில் இருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கிய ஹுமாயூன் கபீரின் ஏஜேயுபி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மம்தா பானர்ஜி தோல்வி
பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா, பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் மம்தா பானர்ஜி அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இறுதியில் 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். நந்திகிராம் தொகுதியிலும் சுவேந்து அதிகாரி வாகை சூடினார்.
முதல்வராகும் சுவேந்து அதிகாரி?
மேற்கு வங்கத்தில் பாஜகவின் முகமாக அறியப்படும் சுவேந்து அதிகாரி, 2வது முறையாக மம்தா பானர்ஜியை தோற்கடித்து இருக்கிறார். இவர் முதல்வராகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
===============