Rajya Sabha Elections : ராஜ்யசபா எம்பியாகும் பாஜக தேசியத் தலைவர் ”நிதின் நபின்” : பிகாரில் இருந்து போட்டி!

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் எம்பியாக பொறுப்பேற்க இருக்கிறார்.
BJP national president Nitin Nabin, who is contesting the Rajya Sabha elections, is set to take charge as an MP
BJP national president Nitin Nabin, who is contesting the Rajya Sabha elections, is set to take charge as an MPgoogle
1 min read

ராஜ்யசபா 37 இடங்களுக்கு தேர்தல்

மாநிலங்களவையில் சுழற்சி முறையில் காலியாகும் எம்பிக்களுக்கான பதவியிடங்கள் அடிக்கடி நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களை நிரப்புவதற்காக, மார்ச் மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

பாஜக சார்பில் 9 பேர் தேர்வு

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியின் 9 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

அசாம், பிகார், சத்தீஸ்கர், ஹரியானா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து இவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ராஜ்யசபா செல்லும் நிதின் நபின்

அதன்படி, பீகாரில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடும் வேட்பாளராக பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவிக்கப்பட்டுள்ளார். பிகாரில் அமைச்சராக இருக்கும் நிதின் நபின் முதன்முறையாக மாநிலங்களவை எம்பியாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

மகாராஷ்டிராவில் 7 இடங்கள்

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 7 இடங்களும், தமிழ்நாட்டில் 6 இடங்களும், பிகார் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 5 இடங்களும் மாநிலங்களவையில் காலியாக இருக்கின்றன. ஒடிசாவில் 4 இடங்களும், தெலங்கானா மற்றும் சத்தீஸ்கரில் தலா 2 இடங்களும், இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடமும் காலியாகின்றன.

தமிழகத்தில் ஆறு இடங்கள்

தமிழ்நாட்டை பொருத்துவரை திமுக 4 எம்.பி.க்களையும், அதிமுக 2 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும். இதில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய 5ம் தேதி கடைசி நாளாகும்.

==================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in