14 கோடி உறுப்பினர்கள், மிகப்பெரிய கட்சி BJP : JP நட்டா பெருமிதம்

BJP President JP Nadda on World Largest Party : 14 கோடி உறுப்பினர்களுடன் பாரதிய ஜனதா கட்சி உலகின் மிகப்பெரிய கட்சியாக திகழ்வதாக, ஜே.பி. நட்டா பெருமிதம் தெரிவித்து இருகிறார்.
BJP President JP Nadda on World Largest Party in Tamil
BJP President JP Nadda on World Largest Party in Tamil
1 min read

பாஜகவில் 14 கோடி உறுப்பினர்கள் :

BJP President JP Nadda on World Largest Party : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றிய அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா, ” மொத்தம் 14 கோடி உறுப்பினர்களை கொண்டு, உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாரதிய ஜனதா செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் 20 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், 13 மாநிலங்களில் பாஜக அரசும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளன. நமது நாட்டில் மிகப்பெரிய பிரதிநிதித்துவ கட்சி பாஜகதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

240 எம்பிக்கள், 1,500 எம்எல்ஏக்கள் :

பாரதிய ஜனதா கட்சிக்கு(Bharatiya Janata Party) மக்களவையில் 240 எம்.பி.,க்கள் உள்ளனர். நாடு முழுவதும்1,500 எம்எல்ஏக்கள், 170க்கும் மேற்பட்ட எம்எல்சி உறுப்பினர்களும் இருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 11 ஆண்டுகளில் செயல்திறன் மற்றும் பொறுப்புள்ள அரசினை நடத்தி வரும் பாரதிய ஜனதா, மக்களுக்கு பொறுப்புள்ள அரசாக செயல்பட்டு வருகிறது.

மக்களை மறந்து விட்ட காங்கிரஸ் :

இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ், வளர்ச்சிப் பணிகள் எதையும் செய்யவில்லை. ஏற்கனவே, ஆட்சியில் இருந்தவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் மறந்து விட்டனர். குடும்ப அடிப்படையிலான அரசியல், ஊழல் மற்றும் கட்சியில் உள்ளவர்களை திருப்திபடுத்தும் செயல்கள்தான் அதிகமாக இருந்தன.

மேலும் படிக்க : TN BJP : பாஜக மையக் குழு கூட்டம் : தலைமை தாங்குகிறார் B.L. சந்தோஷ்

ஆந்திராவின் வளர்ச்சி பணிகளில் மோடி அரசு காட்டி வரும் ஆர்வத்தை சுட்டிக் காட்டிய அவர், தலைநகர் அமராவதியின் கட்டுமானத்திற்காக மத்திய அரசு 15,000 கோடி ரூபாயை வழங்கி இருப்பதாக” தெரிவித்தார்.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in