

போரால் உச்சம்தொட்ட தங்கம்
உக்ரேன், ஈரான் போர் காரணமா, தங்கத்தின் விலை முன் எப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டது. கடந்த ஜனவரி மாதம் சவரன் ஒரு லட்சத்து 34 ஆயிரம் என்ற நிலையை எட்டியது. இது வரலாற்று உச்சமாகும்.
இதன் காரணமாக சாமான்ய மக்கள் தங்கம் வாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
தங்கம் வாங்க வேண்டாம் - பிரதமர் வேண்டுகோள்
தங்கத்தை இறக்குமதி செய்வதால் மத்திய அரசுக்கு அன்னிய செலாவணி அதிகமா செலவாகுது. எனவே, தங்கம் வாங்குவதை பொதுமக்கள் சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்கணும்ன்னு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தாரு.
நாட்டோட அன்னிய செலாவணி செலவை குறைக்கவும், பொதுமக்கள் தேவையின்றி அதிக தொகை கொடுத்து தங்கம் வாங்க கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில பிரதமர் இந்த ஆலோசனைய வழங்கினாரு.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
ஆனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதை கடுமையா விமர்சிச்சன, வர்த்தகர்கள் பாதிக்கும் மரண சாசனம் அப்படின்னு காங்கிரஸ் கடுமையா குற்றம்சாட்டி இருந்துச்சு.
தங்கம் விலை சரிவு
இப்போ தங்கத்தோட விலை சவரனுக்கு ஒரு லட்சத்திற்கு கீழ் சரிந்து கிடக்கு. இன்னும் 2 வாரங்களுக்கு தங்கத்தின் விலை குறையும் அப்படின்னும் நிபுணர்கள் கணிக்கிறாங்க.
பாரதிய ஜனதா தக்க பதிலடி
இந்தச் சூழலில், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு பாஜக பதிலடி கொடுத்து இருக்கு. தங்கத்தை வாங்குவதை தற்காலிகமா நிறுத்தணும் அப்படின்னு பிரதமர் மோடி சொன்னதால தான், இந்தியர்கள், தங்கம் வாங்குவதை குறைத்து கொண்டதாகவும், இதனால அதனோட விலை சரிஞ்சு கிடக்கிறதாவும் பாஜக பதிலடி கொடுத்து இருக்கு.
கிலோ தங்கம் ரூ.1.25 லட்சம்
ஒரு கட்டத்துல சர்வதேச சந்தையில் கிலோ தங்கத்தோட விலை இந்திய ரூபாய் மதிப்புல, ஒரு கோடியே 90 லட்சமா இருந்துச்சு. இப்போ ஒரு கிலோ ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுது.
வியாபாரிகளுக்கு ரூ.65 லட்சம் லாபம்
அப்படின்னா கிலோவுக்கு 65 லட்சம் ரூபாய் குறைஞ்சி இருக்கு. பிரதமரோட அறிவுரையால தான் நகை வியாபாரிங்க பெரும் நஷ்டத்தில இருந்து தப்பி இருக்கிறதாவும், அவங்களுக்கு 65 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு கிடைச்சு இருக்கு.
52 லட்சம் திருமணங்கள்
இந்தியா முழுவதும் 52 லட்சம் திருமணங்கள் நடக்கி இருக்கிறதா புள்ளி விவரங்க சொல்ற நிலையில, பிரதமர் மோடியோட அறிவுரையை பின்பற்றிய மக்களுக்கு குறைஞ்ச விலையில தங்கம் வாங்கும் வாய்ப்பு கிட்டி இருக்கும் அப்படின்னு, எதிர்க்கட்சிகளுக்கு பாஜக சரியான பதிலடிய கொடுத்து இருக்கு.
==========================