
பிஎஸ்என்எல் 4ஜி சேவை :
BSNL 4G Network Service Launch in India : ஒடிசாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று கலந்து கொண்ட பிரதமர் மோடி, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க் சேவையை தொடங்கி வைத்தார். இதையடுத்து, நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கும்.
92,000 - 4ஜி கோபுரங்கள் :
புதிய 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட 92,600 கோபுரங்கள் உட்பட, பிஎஸ்என்எல் அமைத்த 97,500 க்கும் மேற்பட்ட 4ஜி செல்போன் கோபுரங்களின்(BSNL 4G Tower) இயக்கத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ.37,000 கோடி செலவில் நிறுவப்பட்ட இந்த செல்போன் கோபுரங்கள், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. இந்த செல்போன் கோபுரங்கள் சோலார் மின்சாரம் மூலமாக இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராம டிஜிட்டல் சேவையில் BSNL 4G :
நாடு முழுவதும் டிஜிட்டல் இணைப்பை விரிவுபடுத்துவதிலும், கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் சேவையை சிறப்பாக வழங்கவும் பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவை முக்கிய பங்களிப்பை வழங்கும். இதன் மூலமாக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் புதிய சந்தாதாரர்களுக்கு 4ஜி சேவை கிடைக்கும்.
நான்கு கோடி மக்களுக்கு வீடுகள் :
நாட்டில் இதுவரை இணைய இணைப்பு கிடைக்காத 26,700-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 4ஜி சேவை மூலமாக இணைப்பு வழங்கப்பட உள்ளது(BSNL 4G Coverage). விழாவில் பேசிய பிரதமர் மோடி, இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் முயற்சிகளால் ஒடிசா வேகமாக முன்னேறி வருகிறது. இது வரை நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு 4 கோடிக்கு மேற்பட்ட வீடுகளை கட்டி கொடுத்துள்ளோம். பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற விரும்பும் நாடு, கப்பல் கட்டுமானத்தில் கவனம் செலுத்துகிறது.
காங்கிரஸ் மற்றும் கூட்டாளிகள் கொள்ளை :
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் மக்களை கொள்ளையடிப்பதால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காங்கிரஸ் மக்களைக் கொள்ளையடிக்க கிடைத்த எந்த வாய்ப்பையும் விட்டு வைக்கவில்ல
ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு வரி விதித்தது. ஆனால் பாஜக அரசு அதை ரூ.12 லட்சமாக வரம்பை உயர்த்தியது. பாஜ அரசு ஏழை மக்கள், தலித்துகள், பழங்குடியினருக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.
மேலும் படிக்க : 75 லட்சம் பெண்களுக்கு நிதியுதவி : திட்டத்தை தொடங்கிவைத்தார் மோடி
ஒடிசா பல தசாப்தங்களாக வறுமையைக் கண்டுள்ளது, ஆனால் இப்போது செழிப்புக்கான பாதையில் உள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு 4G தொலைத் தொடர்பு(BSNL 4G Network) சேவைகளைத் தொடங்கிய உலகின் ஐந்து நாடுகளில் இந்தியாவும் இப்போது ஒன்று” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
================