

தென் இந்தியா முதல்வர்கள் மாநாடு :
மாமல்லபுரம் அருகே கோவளத்தில் நடைபெற்ற 31-வது தென்மண்டலக் குழுக் கூட்டத்தில் கேரளா முதல்வர் வி.டி. சதீசன், முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்து கேரளாவின் நீண்டகால நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டிற்கு தேவையான நீர் விநியோகம் தொடர வேண்டும் என்பதில் கேரளாவுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும், அதே நேரத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய அணை அமைப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு முதன்மை காரணமாக இருக்கிறது :
1895-ஆம் ஆண்டு கட்டப்பட்ட முல்லைப்பெரியாறு அணை 125 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. அணையின் வயது மற்றும் அதன் கட்டுமான அமைப்பு காரணமாக பாதுகாப்பு குறித்த கவலைகள் தொடர்ந்து இருந்து வருவதாக கேரள அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில், பழைய அணைக்கு மாற்றாக நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய அணை அமைப்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என சதீசன் வலியுறுத்தினார்.
புதிய அணை கட்ட வேண்டும் :
இது குறித்து அவர் பேசுகையில் புதிய அணை கட்டும் திட்டம் தமிழ்நாட்டின் நீர் உரிமையை பாதிக்கும் நோக்கத்துடன் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
அதேபோல கேரளாவுக்கு பாதுகாப்பும், தமிழ்நாட்டிற்கு தேவையான நீரும் ஒரே நேரத்தில் கிடைக்கும் வகையில் தீர்வு காண முடியும் என்றார்
இரு மாநிலங்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு முன்வந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கேரளா முதல்வர் தென்மண்டல மாநாட்டில் பேச்சு:
முல்லைப்பெரியாறு ஆணை என்பது இரு மாநிலங்களுக்கும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது எனவே இந்த விடயத்தை இரு மாநிலங்களும் சுமுகமாக பேசி முடிவு செய்ய வேண்டும் எனவும் அதேபோல அணையினுடைய பாதுகாப்பும் இரு மாநிலங்களுக்கும் மிக முக்கியம் எனவும் அவர் பேசி இருந்தார்
நீடிக்கும் முல்லைப்பெரியாறு சர்ச்சை :
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் பல ஆண்டுகளாக தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
அணை பாதுகாப்பு குறித்து கேரளா தொடர்ந்து கவலை தெரிவித்து வரும் நிலையில், அணை பாதுகாப்பாக இருப்பதாகவும், அதன் நீர்மட்டத்தை உயர்த்தும் உரிமை தமிழ்நாட்டுக்கு இருப்பதாகவும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்த சூழலில், புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கை மீண்டும் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
================