சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் எனும் நான்: பதவியேற்றார் CPR

C.P. Radhakrishnan Takes Oath as 15th Vice President of India : இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன்.
C.P. Radhakrishnan Takes Oath as 15th Vice President of India
C.P. Radhakrishnan Takes Oath as 15th Vice President of India
1 min read

துணை ஜனாதிபதியானார் சி.பி. ராதாகிருஷ்ணன் :

C.P. Radhakrishnan Takes Oath as 15th Vice President of India : துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், தனது உடல்நிலையை காரணம் காட்டி ஜூலை 21ம் தேதி பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 9ம் தேதி நடந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி போட்டியிட்டனர். இதில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 452 வாக்குகள் கிடைத்தன. சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். இதையடுத்து 152 வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

டெல்லியில் பதவியேற்பு விழா :

12ம் தேதி அவர் பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நாட்டின் 15ஆவது குடியரசு துணைத் தலைவராக 67 வயதாகும் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்(CP Radhakrishnan Vice President). டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு துணைத் தலைவர் பதவியை அலங்கரிக்கும் 3ஆது தமிழர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவார். இதற்கு முன்பு சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் இந்தப் பொறுப்பினை வகித்து இருக்கிறார்கள்.

விழாவில் ஜெகதீப் தன்கர், ராகுல் வரவில்லை :

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முன்னாள் குடியரசு துணை தலைவர்கள் ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு, அமீது அன்சாரி ஆகியோரும் கலந்து கொண்டனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மட்டும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.

மேலும் படிக்க : Kariya Kartha to Vice President : ’தேசியம், தமிழகம்’ உயிர்மூச்சு

தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்து :

”சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் எனும் நான்”(Chandrapuram Ponnusami Radhakrishnan) எனக்கூறிதொ பதவியேற்றுக் கொண்டார் சி.பி. ராதாகிருஷ்ணன். அவருக்கு பல்வேறு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஊதியம் எதுவும் கிடையாது என்றாலும், மாநிலங்களவை தலைவர் என்ற முறையில் மாதம் 4 லட்சம் ஊதியமாக கிடைக்கும்(Vice President Of India Salary). டெல்லியில் வசிக்க தனி பங்களா, அரசு சலுகைகள், நாடு முழுவதும் பயணிக்க தனி விமானம் உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்படும்.

==================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in