”தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறங்க” : கர்நாடகாவிற்கு காவிரி ஆணையம் உத்தரவு : 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு திறக்க ஆணை.!

தமிழகத்திற்கு காவிரியில் 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க, கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் அதிரடி உத்தரவினை பிறப்பித்து இருக்கிறது.
Cauvery Authority issued order to  Karnataka govt to release water to Tamil Nadu 3,500 cubic feet for 15 days
Cauvery Authority issued order to Karnataka govt to release water to Tamil Nadu 3,500 cubic feet for 15 daysAi generated
1 min read

காவிரி தண்ணீர்

இந்த ஆண்டு தமிழகத்திற்கு காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை தர கர்நாடகம் மறுத்து வருகிறது. பருவமழை மூலம் போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் கூறி வருகிறது.

பொய்த்துப்போன டெல்டா விவசாயம்

இதனால் தமிழகத்தில் டெல்டா விவசாயம் பொய்த்து போயுள்ளது. நீர்நிலைகளும் வறண்டு காணப்படுகின்றன. இதேநிலை நீடித்தால், கால்நடைகளும் தீவணம் இன்றி பாதிக்கப்படும் அபாயம் உருவாகி வருகிறது.

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

கைவிரித்த கர்நாடகம்

ஆனால், இதை ஏற்க மறுத்து விட்ட கர்நாடகா அரசு, தண்ணீர் திறக்க முடியாது என கைவிரித்து விட்டது.

மேகேதாட்டு பிரச்னை

இது மட்டுமின்றி மேகேதாட்டு அணை பிரச்னையையும் கர்நாடகா அரசு கையில் எடுத்து அரசியல் செய்து வருகிறது.

கர்நாடாகவிற்கு கடும் பின்னடைவு

இதுதொடர்பாக அம்மாநில அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், திருப்பி அனுப்பி விட்டது.

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணை கட்டவே முடியாது என்பதை தெளிவுபடுத்தி விட்டது.

ஒருபுறம் திட்ட அறிக்கை நிராகரிப்பு, மறுபுறம் அணை கட்ட காவிரி ஆணையத்தின் ஒப்புதல் தேவை என்ற விளக்கம், கர்நாடக அரசுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்குறது.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்

இந்தச் சூழலில் டெல்லியில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இதில், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

இந்தஃ கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவித்தபடி 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

என்ன செய்யும் கர்நாடகா அரசு

இந்த உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றுமா, மதிப்பு நடக்குமா, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in