காவிரி ஒழுங்காற்று குழு : நாளொன்றுக்கு 1 டிஎம்சி நீர் வீதம்,தமிழ்நாட்டிற்கு 15 டிஎம்சி தண்ணீர் வழங்க பரிந்துரை..!

தமிழ்நாட்டுக்கு காவிரியில் 15 டிஎம்சி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழுவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Cauvery Regulation Committee: Recommended the release of 15 TMC of water to Tamil Nadu
Cauvery Regulation Committee: Recommended the release of 15 TMC of water to Tamil Nadu google
1 min read

காவிரி ஒழுங்காற்று குழு , காவிரியில் 15 டிஎம்சி நீர் தீறக்க பரிந்துரை

டெல்லியில் நடைப்பெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழுவில் தமிழ்நாட்டிற்கு ஒரு நாளைக்கு 1 டிஎம்சி நீர் வீதம் 15 டிஎம்சி நீர் காவிர்யில் திறந்து தமிழகத்திற்கு திறக்க காவிர் ஒழுங்காற்று குழு மேலாண்மையானது வலியுறுத்தியுள்ளது

காவிரி  நீர் ஒழுங்காற்று குழுவின் 139-ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெற்ற நிலையில் அதில் காவிரியில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் திறந்து விடப்பட வேண்டிய  தண்ணீர்  குறித்து விவாத்து இந்த பரிந்துரையை காவிரி ஒழுங்காற்று குழுவானது அறிவித்துள்ளது

தமிழகத்திற்கான உரிய நீரை திறந்துவிட வலியுறுத்திய ஒழுங்காற்று கூட்டம்

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் நாளை டெல்லியில் நடைபெற உள்ள ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிலையில் , தமிழகத்திற்கான தண்ணீர் திறந்து விடக்கோரி முக்கியமான ஆலோசனையானது இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு இந்த பரிந்துரையை காவிரி ஒழுங்காற்று குழு வழங்கியுள்ளது

காவிர் நீர் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் , முக்கியத்துவம் வாய்ந்த்தாக பார்க்கப்படும் காவிரி ஒழுங்காற்று கூட்டம்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விடக் கோரிய மேகேதாட்டு காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில்

வழக்கின் விசாரணையை வரும் 13ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் உறுதியளித்தியிருக்கும் நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது

குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 88 டிஎம்சி திறக்க வேண்டிய நிலையில் வெறும் 10 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கர்நாடகா திறந்து உள்ளது. இந்த சூழலில் காவிரி ஒழுங்காற்று குழுவில் 15 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று பரிந்துரையானது விடுக்கப்பட்டுள்ளது

இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட தண்ணீரின் அளவை கர்நாடக தர மறுத்திருந்திருந்த நிலையில் , காவிரி ஒழுங்காற்று குழுவில் இந்த பரிந்துரையானது தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக கடந்த ஜூலை 28 அன்று நடந்த கூட்டத்தில், வினாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்ட நிலையில், போதிய மழை இல்லை எனக் கூறி கர்நாடகா அதற்கு மறுப்பு தெரிவித்தது, இந்த சூழலில்

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 13 அன்று விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக கூடிய இந்த காவிரி ஒழுங்காற்று குழுவின் இந்த பரிந்துரையை கர்நாடக அரசு பரிசீலனை செய்யுமா என்பதே எதிர்ப்பார்ப்பாக உள்ளது

=======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in