

காவிரியில் தண்ணீர் வரத்து இல்லை
தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்து, கர்நாடக அணைகள் நிரம்பி வழியாததால், தமிழகத்திற்கு உரிய நீர் இன்று வரை கொடுக்கப்படவில்லை.
ஏமாற்றும் கர்நாடகம்
அணைகளில் நீர் இல்லை என்று கர்நாடக அரசு சொல்லி வருகிறது. காவிரி நீர் வராததால், தமிழகத்தில் குறுவை சாகுபடி பொய்த்து போய் நிற்கிறது. நிலத்தடி நீரை கொண்டு ஒருசில இடங்களில் மட்டுமே சாகுபடி நடைபெறுகிறது.
காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்
இந்தநிலையில், டெல்லியில் இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கர்நாடகா மற்றும் தமிழகத்தின் அதிகாரிகள் காணொலி காட்சி மூலமாக பங்கேற்றனர்.
15 நாட்களுக்கு தமிழகத்துக்கு தண்ணீர்
கேரளா, புதுச்சேரி மாநிலங்களிலும் பிரதிநிதிகளும் இதில் பங்கற்றனர். இந்த கூட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா காவிரியில் தமிழகத்துக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பருவமழையை காரணம் காட்டும் கர்நாடகம்
பருவமழை பெய்யவில்லை. வறட்சியால் அணைகளில் தண்ணீர் இல்லை என்று கர்நாடகா அரசு கூறி வருகிறது. அதுமட்டுமின்றி கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ் உள்பட பிற அணைகளில் இருக்கும் தண்ணீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். விவசாயத்துக்கு பயன்படுத்த கூடாது என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
உத்தரவை செயல்படுத்துமா கர்நாடகம்?
இப்படியான சூழலில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை கர்நாடகா செயல்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனென்றால், இதுவரை காவிரி ஆணையத்தின் உத்தரவுகளை பின்பற்ற கர்நாடக அரசு விரும்பியதே இல்லை.
எனவே, பருவமழை தீவிரம் அடைந்தால் மட்டுமே தமிழகத்துக்கு காவிரியில் உரிய நீர், அதாவது கர்நாடக அணைகளில் இருந்து நிரம்பி வழியும் நீர் கிடைக்கும்.
==============