சமையல் அறைகளில் ”LPGக்கு பதில் Ethanol ஸ்டவ்” : மத்திய அரசு புதிய கொள்கை : திரவ எரிபொருள் தட்டுப்பாடு வராது...!

வீடுகளில் எரிபொருள் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக எல்பிஜிக்கு பதிலாக எத்தனால் அடுப்புகறை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Central Government has decided to introduce ethanol stoves as an alternative to LPG
Central Government has decided to introduce ethanol stoves as an alternative to LPGAI generated
1 min read

இந்தியாவின் எரிபொருள் தேவை

கச்சா எண்ணெய், திரவ எரிபொருளுக்காக வளைகுடா நாடுகளை மட்டுமே இந்தியா நம்பி இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தி முழுத் தேவையையும் பூர்த்தி செய்யும் நிலையில் இல்லை.

எத்தனால் பயன்பாடு அதிகரிப்பு

எனவே, எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எத்தனால் உற்பத்தி அதிகரித்துள்ளது.

சமையல் செய்யவும் எத்தனால்

இந்​நிலை​யில், வீடு​களில் சமையல் செய்​வதற்கு பயன்​படுத்​தப்​படும் எரி​வா​யுக்கு (எல்​பிஜி) பதில் எத்​த​னாலை அறி​முகப்​படுத்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

வரைவு கொள்கை உருவாக்கம்

இது தொடர்​பான வரைவு கொள்​கையை மத்​திய பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு அமைச்​சகம் உரு​வாக்கி வரு​கிறது.

இந்த கொள்​கை​யில், எத்​த​னாலைப் பயன்​படுத்​து​வதை ஊக்​குவிக்​கும் நடவடிக்​கைகள், மானிய திட்​டங்​கள் மற்​றும் இதற்​கான தனி விநி​யோகச் சங்​கி​லியை உரு​வாக்​கு​வது இடம்பெறும்.

எரிபொருள் விநி​யோக நிறு​வனங்​களின் கூட்டமைப்புகளும் அரசுடன் இது தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றன. செப்​டம்​பர் மாதத்துக்குள் இது தயா​ராகி ​விடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

எத்தனால் உற்பத்தி 2 கோடி லிட்டர்

இந்தியா​வில் எத்​த​னால் உற்​பத்​தித் திறன் கணிச​மாக அதிகரித்துள்ள நிலை​யில் இந்த முயற்சி மேற்​கொள்​ளப்​படு​கிறது. ‘கேர்​-எட்ஜ் ரேட்​டிங்​ஸ்’ அறிக்​கை​யின்​படி, எத்​த​னால் உற்​பத்தி திறன் ஆண்​டுக்கு 2,000 கோடி லிட்​டரைத் தாண்​டி​யுள்​ளது.

எத்தனால் சமையல் அடுப்புகள்

எத்​த​னாலில் இயங்​கும் சமையல் அடுப்​பு​கள் ஏற்​கெனவே சோதனை செய்​யப்​பட்டு வரு​கின்​றன. பொதுத்​துறை எண்​ணெய் நிறு​வனங்​களும் இதற்​கான ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுப் பணி​களில் ஈடு​பட்​டுள்​ளன.

பெட்ரோல் பங்குகளில் திரவ எத்தனால் விற்பனை

பெட்ரோல் பங்​கு​களில் எத்​த​னால் விநி​யோக மையங்​களை அமைக்க எண்​ணெய் நிறு​வனங்​கள் அறி​வுறுத்​தப்​படலாம். நுகர்வோர் இந்த ஏடிஎம்​கள் மூலம் சிறிய கேன்​களில் எத்​த​னாலை வாங்​கிச் சென்று சமையலுக்​கு பயன்​படுத்​திக் கொள்ள முடி​யும்.

அதாவது கெரோசினை போல எத்தனாலை பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.

இந்தியாவுக்கு கூடுதல் லாபம்

எல்​பிஜிக்கு மாற்​றாக உள்​நாட்டு எத்​த​னாலைப் பயன்​படுத்​து​வது நாட்​டின் ஆற்​றல் பாதுகாப்​புக்கு மிக​வும் நல்​லது என நிபுணர்​கள் கருதுகின்​றனர்.

மாற்று சமையல் எரிபொருட்​களுக்கு மாறு​வ​தால் சுமார் ரூ.2 லட்சம் கோடியை சேமிக்க முடி​யும்.

எத்தனால் ஏற்றுமதி

எத்தனால் உற்பத்தி அதிகமாக இருக்கும் போது, அதை ஏற்றுமதி செய்தும் இந்தியா வருவாய் ஈட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனால் ஸ்டவ்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், தூய்மையான எரிவாயு பயன்பாடு அதிகரிக்கும். சுற்றுச்சூழல் மாசும் கணிசமாக குறையும்.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in